வண்டு பாயும் திட வேலவன் தென்மலை
பூங்குழல் மொய்க்கும். அது தெரியும். என்னதான் மிகைக்கூறல் அழகை படித்து ரசிக்க முடிந்தாலும், தலைவி தலையை வண்டு மொய்ப்பதை நினைக்க கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும். அந்தத் திகிலை படம்பிடித்த கவித் தருணங்களும் இருக்கலாம், என்று எண்ணிக் கடந்ததுண்டு. இன்று தட்டுப்பட்டது: வண்டை தலைவி தலைவி பூங்குழல் மீது ஏவி விட்டால் பாயுமன்றோ? ஆ! ஈதென்ன விபரீத சண்டைக் காட்சி? ஏவுவது யார்? மற்றொரு தலைவி, யார் சொன்னால் காட்டு வண்டு கூட கேட்குமோ, அவள்