Tuesday, July 25, 2017

செய்

மகாபாரதம்
சாந்திபர்வம்- 75ம் அத்யாயம்


யுதிஷ்டிரன்: 

ஆட்சி அதிகாரம் தரும் மகிழ்ச்சிசையை கணப்பொழுதும் விழையேன்
அதிகாரத்தை அதன் பொருட்டுக்காகவே விழைபவனும் அல்லேன்
நல்லாட்சி செலுத்துவதால் வரும் நற்பயனுக்காகத் தான் அதை நாடினேன்.


ஆனால் இவ்வழி  எய்துதற்கு யாதொரு நற்பயனும் இருப்பதாய் தெரியவில்லை. அதனால் ஆட்சிவிடுத்து வனம் ஏகி நற்பயன் எய்துவேன்

செங்கோல் துறந்து, புலனடக்கி   திருவனம் புகுந்து, வேரும்  கனியும் உண்டு வாழும் துறவியாகி தருமநற்பயன் எய்துவேன்பீஷ்மர்

உன் உள்ளத்தின் தன்மை அறிவேன் யுதிஷ்டிரா!
யாரொருவரையும் புண்படுத்தாத உன் மனநிலை அறிவேன்

ஆனால் யாரையும் புண்படுத்தாமல் நீ அரசாள முடியாது

சாந்தமும், இரக்கமுமே உன் மனச்சாய்வுகள்
அசாதரண நியாய உணர்வு கொண்டவன் நீ
காருண்யமும், நல்லொழுக்கமும் கொண்டவன் நீ.

ஆனால் ஆற்றல் அற்றவன் நீ

இதனால்  தான் மக்கள் உன்னை பெரிதாக மதிப்பதில்லை.

நீ உன் மூதாதையரின் வழி நடப்பாயாக
நீ விரும்பும் இவ்வழி அரசர்கள் தேர்வு செய்யக்கூடாத ஒன்று
கடமையை  முடித்தபின் அதை எண்ணி பதட்டம் அடைதல் ஆகா
“புண்படுத்தா நடத்தை” என்பதைக் கொள்கையாக கடைபிடியாய்

அந்நடத்தையின் மூலம் மக்களைக் காக்கும் நீதியை சம்பாதிக்க இயலாது
உன் அறிவும், ஞானமும் உன்னை தேர்வு செய்ய உந்தும் இப்பாதையானது
உன் தாயும் தந்தையும் உனக்காக வேண்டிய வரங்களுக்கு முரணானது

உன் தந்தை பாண்டு உனக்கு வீரத்தையும், வலிமையையும், உண்மையையும் வேண்டினான்
உன் தாய் குந்தி உனக்கு உயர்-சிந்தனையையும், விசால மனப்பான்மையையும் வேண்டினாள்

ஶ்ராத்தங்களிலும், வேள்விகளிலும், பித்ருக்களும், தெய்வங்களும், ஸ்வாஹா, ஸ்வதா  என்று  பிள்ளைகளிடமிருந்து அவிசுகளைக் கோருகின்றார்கள்.

வேள்விகள், அதற்கான படிப்பு, அதற்கான பரிசுகள் (அவிசுகள்) , பிரஜாஸம்ரக்ஷணம் –  இவற்றால் கைகூடுவது நற்பயனோ, பாவமோ (என்று சிந்திப்பதை விடுத்து)– இவற்றைச் செய்யவே நீ பிறந்திருக்காய்.

குந்திமைந்தா, வாழ்க்கை அளிக்கும் பொறுப்புகளைச் சுமப்பவர்களுக்கு – சுமை தாளாது இடரினாலும் – புகழ் மங்காது
சரியாக பயில்விக்கப்பட்ட குதிரைகூட சரியாக சுமக்கும் தன் சுமைகளை

சரியான சொல்லும் செயலும் உள்ள யாரும் கண்டனத்துக்கு ஆளாவதில்லை.
சொல்லும் செயலுமன்றோ வெற்றிக்கு வழிசெய்பவை.

எந்த மனிதனும் –  ஒழுக்கமான க்ருஹஸ்தனோ, அரசனோ, பிரம்மச்சாரியோ – அடிபிறழாமல் நடக்கமுடிந்ததில்லை.

சிறுதளவே நற்பயன் தருவது என்றாலும், நற்செயல்களை தொடர்ந்து செய்வதே, முற்றிலும் துறப்பதைக் காட்டிலும் உகந்ததாகும்

செயலின்மை ஒரு பெரும்பாவம்.

No comments:

Post a Comment

ஆரினிக்கடைவர்

காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர் வித்துக்கொரு மு...