செய்
மகாபாரதம் சாந்திபர்வம்- 75ம் அத்யாயம் யுதிஷ்டிரன்: ஆட்சி அதிகாரம் தரும் மகிழ்ச்சிசையை கணப்பொழுதும் விழையேன் அதிகாரத்தை அதன் பொருட்டுக்காகவே விழைபவனும் அல்லேன் நல்லாட்சி செலுத்துவதால் வரும் நற்பயனுக்காகத் தான் அதை நாடினேன். ஆனால் இவ்வழி எய்துதற்கு யாதொரு நற்பயனும் இருப்பதாய் தெரியவில்லை. அதனால் ஆட்சிவிடுத்து வனம் ஏகி நற்பயன் எய்துவேன் செங்கோல் துறந்து, புலனடக்கி திருவனம் புகுந்து, வேரும் கனியும் உண்டு வாழும் துறவியாகி தருமநற்பயன் எய்துவேன்