வசையில் புகழ் மகாநதி


 என் பத்தாவது பாடப்புத்தகத்துல ஒண்ணு பூவண்ணனோட ‘வளவன் பரிசு’. அதுல பட்டினப்பாலை நிறைய வரும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் வம்சத்து ஆள் ஒருத்தர் செகண்ட் ஹீரோ. தன்னைப் பாடிய உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாலற்வளவன் தந்த பரிசான உயர்ந்த மண்டபத்தை, பாண்டியர்கள் தகர்க்காம காப்பாத்துறதைப் பத்தின சரித்திரசாகச நாடகம்.

சிம்லா ஸ்பெஷல் ஸ்ரீப்ரியா நாடகம் மாதிரி ஓங்கி உயர்ந்த பட்டினப்பாலை மண்டபம் எல்லாம் செட்-ல வரும்.

எல்லாரும் ஒவ்வொரு பாத்திரம் ஏற்று வகுப்புல படிப்போம் (நான் படைவீரன்-1)

அதுக்கப்புறம் பட்டினப்பாலை படிக்கவே இல்லையேன்னு திடீர்னு குரங்குமனம் தாவி எடுத்து வாசிச்சா…ப்பா.
வளவன் மண்டபம் தந்தது கதையா இருக்கலாம். ஆனா  தரவேண்டியதுதான்.  இத்தனைக்கும் இன்னும் 100 வரி தான் வந்திருக்கேன்.

காவிரிப்பூம்பட்டினத்தில் காவிரி கடலில் கலப்பதைப் பற்றிய விவரணை

மா மலை அணைந்த கொண்மூ போலவும்,
தாய் முலை தழுவிய குழவி போலவும்
(95-96)

கொண் மூ – மேகம்  (மேகமாம்… ஆம் பின்னொட்டு எல்லாம் நீங்களே போட்டுக்கவேண்டியது, நான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி தான் அர்த்தம் சொல்லுவேன்)

4ம் நூற்றாண்டு (டாம்).
1700 வருஷம் கழிச்சு படிச்சா புரியுது. என்ன விளையாட்டு இது!?


அதுக்கு அடுத்த ரெண்டொரு வரியைப் பார்த்தா.

தீது நீங்க கடலால் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை
(99-105)


அனேகம் புரியுது. புரியாததை இங்கே பார்த்துக்குங்க.

நீராடி தீது போக்கும் வழக்கம் இருந்திருக்கு!

அது முடிந்த மாத்திரத்திலேயே sobriety, solemnity எல்லாம்  முடிஞ்சு களியாட்ட மனநிலை. அதுவும் எப்படிப்பட்ட களியாட்டம் :

பல் பொறி மருண்டு - – enjoyed with all the senses
அகலாக் காதலொடு விளையாடி 

As a card carrying member of சினிமா பார்த்து வளர்ந்த பலஹீனமான கூட்டம், மகாநதி ஸ்ரீரங்கநாதரின் ஞாபகம் தான் வருது. குழந்தைகளுடன் ஆற்றங்கரையில் இறங்கி போடும் குதியாட்டம், கோவில் கணங்களுக்கு இடையில் – அதுபாட்டுக்க – வரும்.

தீது நீங்க கடலால் ஆடியும் மாசு போக புனல் படிந்தும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும்

பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தெய்வ லோகமேதானடி

Bucolic anthem!

பி.கு 1: பாவக்கறையை நீரில் கழுவும் பொல்லா மனங்களை நொந்துகொள்ளும் - judgement எல்லாம் படத்தில் பிறகு வருது. அது வேற. Or rather, அது தான் படமே.

பி.கு 2: The bucolism is a misleading reduction too, insofar as the plot progression is also about the decline of a respected headman and his - என் சுயநலத்தில் பொதுநலனும் கலந்திருக்கிறது rage.  The film is certainly not a simplistic சொர்க்கம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி. One day the eloquent equanimus will write this post.

Comments

  1. lovely, I visited your blog for some reference in Jan. Not sure how I missed last month :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar