வசையில் புகழ் மகாநதி
என் பத்தாவது பாடப்புத்தகத்துல ஒண்ணு பூவண்ணனோட ‘வளவன் பரிசு’ . அதுல பட்டினப்பாலை நிறைய வரும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் வம்சத்து ஆள் ஒருத்தர் செகண்ட் ஹீரோ. தன்னைப் பாடிய உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாலற்வளவன் தந்த பரிசான உயர்ந்த மண்டபத்தை, பாண்டியர்கள் தகர்க்காம காப்பாத்துறதைப் பத்தின சரித்திரசாகச நாடகம். சிம்லா ஸ்பெஷல் ஸ்ரீப்ரியா நாடகம் மாதிரி ஓங்கி உயர்ந்த பட்டினப்பாலை மண்டபம் எல்லாம் செட்-ல வரும். எல்லாரும் ஒவ்வொரு பாத்திரம் ஏற்று வகுப்புல படிப்போம் (நான் படைவீரன்-1) அதுக்கப்புறம் பட்டினப்பாலை படிக்கவே இல்லையேன்னு திடீர்னு குரங்குமனம் தாவி எடுத்து வாசிச்சா…ப்பா.