30

30

சமயத்தில் மாமா என்றும்
கூப்பிடத் தொடங்கிவிட்ட
சிறுவர்கள் தொலைவில் கண்டால்

கூச்சலைப் பொறுத்துக் கொள்ளத்
தவறினேன். கிழவனானேன்

முப்பது வயதாயிற்று 
முதுமையும் வரலாயிற்று

வெயில்களை, மழையைக், காற்றைப்
பனிகளை பயந்து கொள்ளப்
பெரியவர் சொல்லித் தந்தார்

முப்பது வயதாயிற்று 
முதுமையும் வரலாயிற்று

கண்கள்மேல் கையைப் பாம்பின்
படமெனக் கவிழ்த்துக் கொண்டு
(தெருக்களில் தன்னை யாரோ
அழைத்ததாய்க் கருதித் தேடிப்)
பார்க்கிற வயதில் பாதி
கடவுளே வந்தாயிற்று

- ஞானக்கூத்தன்
கணையாழி, நவம்பர் 197129282726

Comments

Post a Comment

Popular posts from this blog

கீசக வதம்

போதும்

EXT - DAY (Kinda)