ஷோக்குக்குத் தான்யா மதிப்பு



வாதாம் பலகலை கற்றுவந் தாலுமிவ் வையகத்தில்
ஏதாம் புனைநலம் இல்லான் எழில்? நல் லிடமுந்தந்து
பீதாம் பரற்கொரு பெண்தந்த பாற்கடல் பின்புவந்த
வேதாந்த வித்தெனும் வானாம் பரற்கு விடந்தந்ததே

விளக்கம்:
ஒன்றோடொன்று மாறும்படியான பல கலைகளை கற்று வந்தாலும் (கற்று உவந்தாலும்) இவ்வுலகத்தில் ஆடையணிகளால் நிறைந்து விளங்கும் தோற்றம் இல்லாதவற்கு அமைந்த அழகால் என்ன பயனாம்? பீதாம்பரத்தை தரித்து வந்த திருமாலுக்கு பாயல் கொள்ள நல்லதோர் இடத்தோடு திருமகளையும் தந்த பாற்கடலானது , பின்பு (பாம்பணிந்து, புலியதளாடை தரித்து வந்த) வேதாந்தத்திற்கு முதல்வன் என்னும், வானத்தை ஆடையாகத் தரித்த சிவபெருமானுக்கு விஷத்தை அல்லவோ தந்தது!

-
தனிப்பாடற்றிரட்டு
தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

Comments

  1. //ஏதாம் புனைநலம் இல்லான் எழில்?//

    மேக்கப் இல்லாம, திரிஷா/இலியானாவைப் பாக்க முடியுமாய்யா ஒன்னால?:)

    ஆள் பாதி, ஆடை பாதி:)
    Looks Expensive Than Love!

    //பீதாம் பரற்கொரு பெண்தந்த பாற்கடல் பின்புவந்த
    வேதாந்த வித்தெனும் வானாம் பரற்கு விடந்தந்ததே//

    அழகான சொற்செட்டு!
    கட்டளைக் கலித்துறையா ஆகி இருக்க வேண்டிய பாட்டு, விளங்காய் வராம, ஆசிரியத் துறை ஆயிருச்சி:)
    அதனால் என்ன? சொற்செட்டு விழும் அழகே அழகு
    = விடந்தந்ததே! விடந்தந்ததே! வேகமாச் சொல்லிப் பாருங்க!:)
    -----------

    Jokes apart...

    ஈசன் சிவபெருமானுக்குக் கடல் விடம் தந்தாலும், அதுவே அவருக்கு
    = "தியாகராஜர்" என்னும் பட்டமும் தந்தது!
    = தில்லையின் மிக்க திருவாரூர்; தியாகேசன்!

    கடல், திருமாலுக்கு மட்டுமா பெண் தந்தது?
    ஈசனுக்கும், அன்பு மனையாளின், "கழுத்தைக் கைப் பிடிப்பு" தந்ததே! அந்த நீலக் கழுத்தல்லவோ காதலுக்குச் சாட்சி!:)

    இந்தப் பாட்டுக்குப் போட்டிப் பாட்டு எழுதட்டுமா?:)))

    ReplyDelete
    Replies
    1. //= விடந்தந்ததே! விடந்தந்ததே! வேகமாச் சொல்லிப் பாருங்க!:)//
      இடந்தததே?

      //இந்தப் பாட்டுக்குப் போட்டிப் பாட்டு எழுதட்டுமா?:)))//
      கமான்! :-)

      Delete
  2. குற்றாலக் குறவஞ்சி -ன்னு மக்கள் காப்பியம்!
    அதை ஒட்டி வந்த இன்னொரு நூல் = திருக்குற்றால ஊடல்!
    அதுல கூட, இப்பிடியே "ஷோக்கு" பத்தி வரும்!:)

    Dialogue between Siva Peruman & annai umaiyaaL

    அன்னையை, அவரு சீண்டுவாரு!
    உமையன்னையோ, தன் பிறந்த வீட்டுப் பெருமை, எங்க திருமால் அண்ணா அப்படியாக்கும், இப்படியாக்கும் -ன்னு அளந்து விடுவாங்க!:)

    அதுக்கு ஈசன் சொல்லும் அதே வரிகள்: "ஷோக்குக்குத் தான்யா மதிப்பு" :))
    ---------------

    ஈசன் வம்படிப்பாரு!

    அண்ணல் வரைத் திரிகூடப், பெண்ணமுதே கேட்டி உங்கள் - அண்ணனான
    கண்ணன் முதல் வரகுதின்று, வாயால் எடுத்த பண்டைக் - கதைகேளாயோ?

    மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை - வாய் மேல் இட்டான்
    பெண்ணொருத்திக் காயொருத்தி புடவை கிழித்தான் அவனே - பித்த னாமே!
    ---------------

    அம்புட்டு தான்! அண்ணனைச் சொன்னதும் அந்தம்மாவுக்குப் பொத்துக்கிட்டு வரும்:))

    பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தான் அவனோடு - பிறந்த வாசிக்(கு)
    இத்தனைபெண் சீருமிட்டான் கையம்பா(க) உமக்கிருந்தான் - எந்த நாளும்

    மைத்துனனைப் பாராட்டி எங்கள் அண்ணன் செய்தநன்றி - மறந்த தாலே
    சத்தி பீடத்து உறைவீர் செய்தநன்றி நீர்மறந்த - சங்கை தானே!
    ------

    வாய்ச்ச திரி கூடமலைக்கு இறையவரே சொன்னமொழி - மறக்க வேண்டா
    ஏச்சுவந்து சுமந்தது எங்கள் அண்ணற்கோ உமக்கோ என்று - எண்ணிப் பாரீர்

    காய்ச்சியபால் கண்ணன் உண்டான்; வேடன் எச்சில் நீர்கலந்தீர் - கருணை யாமால்
    ஆய்ச்சியர் கையால் அடிபட்டான்; ஐயரே நீர் பேடி கையால் அடிபட்டீரே
    ------

    அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமாய் ஆலின் கீழே
    பன்னாளும் தூங்கின நீர் என்னாலே மணக்கோலப் பதம்பெற்றீரே

    இந்நாளிற் சலவைக் கட்டிப் பூமுடித்துத் தினஞ் சுகித்தால் இதுவோ செய்வீர்?
    மின்னாரும் இனிச் சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே?
    ---------------

    செம சாத்து சாத்துவாங்க உமையன்னை:)
    செம Romantic Duel of Husband & Wife!
    கடேசீல, அவரு Surrender, telling, "ஒலகத்துல ஷோக்குக்குத் தான்டீ மதிப்பு" :))

    ReplyDelete
  3. நல்ல பாடல்! நல்ல விளக்கம்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar