சில கண்ணன் பாசுரங்கள்



நாளை கிருஷ்ண ஜெயந்தி. அதை முன்னிட்டு ஒரு சிற்றுரை:



குறிப்பிட்ட பாடல்கள்:

தாய்முலைப் பாலில்  அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென்றே பிறர் ஏசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்த என் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே
(701)


என்னை வருகவெனக் குறித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப் பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து இங்கு ஒரு நாள் வருதியேல் எஞ்சினம் தீர்வன்நானே
(705)

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திரு  கோளூரே
(3517)

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
(3382)

முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறை முறைந்தம் குறங்கு இடையிருத்தி
எந்தையே என்றன் குலப் பெருஞ்சுடரே எழுமுகில் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடைக் கண்ணினும்
காட்ட நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே
(710)
 
Older Posts on Krishnan Pasurams: 1, 2 and 3


Comments

  1. one observation, you are less than fifty :-)

    //உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
    கண்ணன் எம்பெருமான் //கண்ணனை உருகி உளமார அனுபவிக்கும் எவரும் இந்த நிலையில் தான் இருப்பார்.அதை உணர்த்தும் அருமையான வரிகள்.

    //வீங்கிருளின் நுண்துளியாய்,//நீங்கள் இதை மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது அருமை.

    எந்தத் தாயும் தன் குழந்தையின் குழந்தை பருவத்தை அனுபவிக்க ஆசைப் பட்டே பிள்ளை பெற்றுக் கொள்கிறாள். இதை அனுபவிக்காமல், தன் குழந்தையின் உயிர் பிழைத்தால் போதும் என்று தேவகியும் வசுதேவரும் கண்ணனை யசோதையிடம் வளர விட வேண்டிய சூழ்நிலை. வசுதேவரும் தேவகியும் இழந்த இன்பத்தை யசொதையும் நந்தகோபரும் பெற்றனர். அதனால் தான் யசொதையைப் பார்த்து என்ன தவம செய்தனை யசோதா என்று பாடுகிறோம்.

    வேறொரு பாடலில், கண்ணன் முதல் முறை மதுரா வருகிறான், கம்சனைக் கொல்ல. அப்பொழுது அவனுக்கு பத்து + வயசு இருக்கும். அவன் வருகிறான் என்று கேள்விப்பட்டு தேவகியின் மார்பகங்களில் பால் சுரப்பதாக பாடல் வரும். தாயின் ஏக்கத்தை இதை விட அழகாக பிரதிபலிக்க முடியாது.

    தேவகி வசுதேவருக்காகவும் வருத்தப் படுவது அவளின் நல்ல மனசை காட்டுகிறது.

    அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் :-) கண்ணனின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

    amas32

    ReplyDelete
    Replies
    1. கமெண்டுக்கு நன்றி.

      //one observation, you are less than fifty :-)// :-)
      கிளரொளி இளமை கெடுவது திண்ணம் :-)

      தேவகி பாடல் அருமை, தேடணும்.

      //தேவகி வசுதேவருக்காகவும் வருத்தப் படுவது அவளின் நல்ல மனசை காட்டுகிறது.// அந்த கவிதைதருணத்தை தேர்வு செய்த குலசேகராழ்வாரை நினைத்து வியக்கிறேன்.

      Delete
  2. This is wonderful, my friend. வெஞ்சுடரில் தாமடுமால் is one of my favourite poems of Nammalwar. நான்காம் திருமொழி is full of rare gems. Incidentally, the traditional urai says that வீங்கிருளில் நுண்துளியாய் denotes the dew drops at night but I think Nammalwar speaks here about the arrival of dawn, where the light comes first as fine dots in the dark sky - that heralds the arrival of the resplendent chariot of the Sun at a distance!. When I recently saw these wonderful speckles of light at dawn in the Masai Mara plains, I was reminded of Nammalwar.
    Thanks!

    ReplyDelete
    Replies
    1. Thank You.

      //நுண்துளியாய் denotes the dew drops at night//
      Oh ok. Didn't know that. Thank You.

      // but I think Nammalwar speaks here about the arrival of dawn, where the light comes first as fine dots in the dark sky//
      Hmm...would that be இருளின் துளி?
      The image that I found overwhelming was how a visualization of the lonely nothingness that is the night. Composed of several individual moments of loneliness, each fully fleshed out in its darkness - physical and otherwise.

      Delete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director