Beware of Satirists


Rama knocks off Ravana's crown with a single arrow. And then,..

மாற்ற அருந் தடமணி முடி இழந்த வாள் அரக்கன்,
ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்
ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப
போற்ற அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும்-போன்றான்

The powerful demon stood having lost his peerless crown (in a whiff), much like someone of great wordly standing, losing fame and stature, due to a single satirical piece of a gifted poet.

Whoa!

Comments

  1. Is it a Kamban trademark to play down the Hero? From whatever little I know of Kamba Ramayanam (all of the little through your blogposts), Rama is often times brought down subtly. While the satirical poet is gifted here, he is bringing down someone of worldly stature. While it is an awesome ploy to pit the villain as stronger than the Hero and make the Hero come up trumps struggling, and also noting that Ravana was indeed highly reputed, is it not playing down Rama comparing him to a jester? Or is it just me?

    ReplyDelete
    Replies
    1. Oh no no no.
      He isn't likening Rama to a jester or anything. He is quite deferential and accords him high praise. He isn't being satirical in this very poem.

      Delete
    2. This poem doesnt have satire in it!
      It just has an unusual & innovative simile in it!
      ...and that simile, crisply tells the "power of a satire"!

      No one has contemplated such a simile (உவமை)
      Generally poets compare the defeated king as setting sun, dying lamp etc etc!
      But to denote a 'defeat at a crucial moment',
      Kamban compares it to 'a satire spoken at a crucial moment',
      and lo, it overturns everything in one flash! = Marvel of Kamban's Poetry!

      Delete
  2. அங்கதம் = பல தலைமுறைகளாகப் புகழ் பெற்ற ஒரு இலக்கியக் கூறு!
    தொல்காப்பியமே இந்த இலக்கிய உத்தியைக் காட்டிச் செல்லும்! = "அங்கதம் தானே, செம்பொருள் ஆயின வசை எனப் படுமே"
    Charlie Chaplin's Great Dictator is a perfect example for அங்கதம் on Hitler:)

    அங்கதம் வேறு! வஞ்சப் புகழ்ச்சி வேறு!
    * வஞ்சப் புகழ்ச்சி = புகழ்வது போல் இகழ்வது (அ) இகழ்வது போல் புகழ்வது!
    * அங்கதம் = இகழ்வது மட்டுமே:) ஆனா நகைச்சுவையா இகழ்வது!

    பேசுற பேச்சு ஒன்னு, செய்யுற செயல் ஒன்னு-ன்னு இருக்கும் Hypocrite/Hypocritical Attitude (போலித்தனம்) தான் அங்கதத்துக்கு அல்வா சாப்பிடுறா மாதிரி:)

    பொதுவா எல்லாராலும் ஏற்கப்பட்ட ஒன்னா இருக்கும்! அதுல பல குறைகள் இருந்தாலும் மக்களுக்கு அது பழகிப் போயிருக்கும்! புனிதம்/கட்டமைப்பு etc etc
    அந்தக் கட்டமைப்பை, அதனோட போலித்தனங்களை வைத்தே கேலி செய்தால்?
    அந்த மக்களே சிரிச்சிடுவாங்க! அந்தக் கொள்கை அசிங்கப்பட்டு போயீரும்!

    அப்படி ஆயீருச்சாம் இராவணன் நிலைமை!
    இராவணன் = எல்லாராலும் ஏற்கப்பட்ட/பழகிவிட்ட ஒரு கட்டமைப்பு!
    ஆனா ஒரு நொடியில், அவன் ஆட்களே சிரிக்கும் அளவுக்கு...
    அந்தக் கட்டமைப்பு அசிங்கப்பட்டு போயிருச்சி! ஒத்த வரி அங்கதம், ஒட்டு மொத்தமும் அசைத்து விட்டது!

    எப்பேர்ப்பட்ட உவமை!
    தோற்ற அரசன் = அஸ்தமிக்கும் சூரியன், அணையும் விளக்கு-ன்னே உவமை சொல்லி வந்த கவிஞர் மத்தியிலே.....கம்பன் மட்டும் என்னமா மாத்தி யோசிக்கிறான்!
    இராவணின் முகமும் மனமும் அப்படியே நம்ம கண்ணு முன்னே வரா மாதிரி ஒரு உவமை...Kamban always gives and gets wows!

    ReplyDelete
  3. பாட்டைப் பலாச் சுளை மாதிரி ஒவ்வொன்னாக் கிள்ளி எடுங்க!

    மாற்ற அருந் தட மணிமுடி = மாற்றவே முடியாத மணிமுடி!
    எப்படி மாறும்? ஒரு போர் இல்ல, எதிரி இல்ல, மரணம் இல்ல...
    அதான் ஒன்னுக்கு ரெண்டா உரிச்சொல் போடுறாரு = அருந் + தட

    இழந்த வாள் அரக்கன் = வாள் வச்சிக்கிட்டு இருக்குற அரக்கனா? அவன் கையே போதாதா?
    இங்கே வாள்-ன்னா = ஒளி, மினுமினுப்பு!
    வாளிப்பா இருக்குறா-ன்னு சொல்லுறோம்-ல்ல? அந்த "வாள்"!

    ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் = அவன் ஏத்தம், ஏழு உலகம் மட்டும் அல்ல! எவ்வுலகத்திலும் இருக்கு! கைலாசத்தைக் கூட அசைத்துப் பார்த்தவன்!
    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
    அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை-ன்னு சொல்வாரு ஐயன் வள்ளுவரு!
    ஆனா இராவணன் = இவ்வுலகம், அவ்வுலகம், எவ்வுலகம்!
    ------

    ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப = எத்தனையோ கவிஞர்கள் இருக்காங்க! சும்மா ஜாலிக்கு எழுதறவங்க! முகத்துதி பாடுறவங்க!
    அறுபது வயசு அரசன், மாடியில் உலாவறதைப் பார்த்து, ஆறு வயசுப் பொண்ணு பூப்படைந்தா-ன்னு உலா பாடுறவங்க!

    ஆனா இந்தக் கவிஞன் வாக்கு? = அறத்தின் வாக்கு!
    அதான் நெடுங் கவிஞன்-ன்னு சொல்றாரு!
    நெடுங் கவிஞன் = உசரமான கவிஞன்??

    ReplyDelete
  4. குறுந்தொகை x "நெடுந்"தொகை

    அகநானூறை "நெடுந்" தொகை-ன்னு சொல்றது வழக்கம்!
    குறுந்தொகை போல 4-6 lines இல்லாம, நீண்ட பாடலா இருப்பதாலா?
    அதை விட நீண்ட அகப்பாடல்கள் கலித்தொகை, பரிபாடலில் உண்டு! ஆனா அகநானூறு மட்டுமே "நெடுந்" தொகை! ஏன்?

    உணர்ச்சியை நுட்பமா (குறுகிச்) சொன்னா = குறுந்தொகை!
    உணர்ச்சியை ஆறு போல ஓட விட்டா = நெடுந்தொகை!

    இங்கே கம்பன் சொல்லும் "நெடுங்" கவிஞன் அப்படித் தான்!
    உணர்ச்சிப் பிரவாகமா பொங்கிக் கொட்டுபவன்! = நெடுங்-கவிஞன்! நல்லவன்! ஆற்றல் மிக்கவன் = ஆற்றல் + நல் + நெடுங் கவிஞன்!
    ------

    இது போல உணர்ச்சி மிக்க கவிஞர்கள், சில சமயங்களில் ஒரே சொல்லு மட்டுமே சொல்லி வீழ்த்தி விடுவார்கள்!
    நிறைய ஆதாரங்களோடு பேசுபவன்...திடீர்-ன்னு ஒன்னுமே பேசாமல், ஒத்தை வரி பேசுனா எப்படிச் சுரீர்-ன்னு இருக்கும்! அதான் "ஓர்" அங்கதம் உரைப்ப!

    ஒத்த சொல்லு, அங்கதச் சொல்லு, மொத்த முரண்பாட்டையும் மேடையேற்றி உடைத்து விட்டது!
    கட்டமைப்பில் உள்ளவர்களே சிரித்து விட்டார்கள்! கட்டமைப்பு கேலியாகப் போய் விட்டது!
    அறிவில்/வாதத்தில் தோற்றாலும் பரவாயில்லை! ஆனா நகைச்சுவை மூலமா தோற்று விட்டது! ’செத்தான்டா சேகரு’ போல:)
    --------

    இராவணனுக்கு அப்படியே பொருத்திப் பாருங்க இந்த உவமையை!

    * தங்கச்சியின் காமத்தை அசிங்கப்படுத்தினவர்களைத் தண்டிக்கப் புறப்பட்ட ஒருத்தன், தானே காம வயப்பட்டுட்டான்! தங்கச்சியாவது பங்கச்சியாவது!
    முன்னாடி நான் பேசுன கொள்கையாவது, குச்சி மிட்டாயாவது! என் காமமே எனக்கு முக்கியம்!:)) = இதான் அங்கதமாப் போயிருச்சி!

    * அறிவால்/வாதத்தால் தோற்காமல், அங்கதச் சிரிப்பால் தோற்றுப் போதல் = பெரிய பெரிய தேவர்கள், முனிவர்கள், கைலாச நந்தி தேவர் கிட்ட எல்லாம் தோற்காதவன்...அற்பம் இராமன் என்னும் பூவுலக மானிடன் கிட்ட தோற்றுப் போயிட்டான்

    * அவனைச் சார்ந்தவர்களே சிரித்து விட்டார்கள்! கட்டமைப்பு கலங்கி விட்டது! = அங்கத வல்லமை! Power Of Justful Satire!

    இப்படியெல்லாம் உவமை காட்ட, கம்பனால் மட்டுமே முடியும்! அதான் = கவிச் சக்கரவர்த்தி!

    ReplyDelete
  5. Lovely KRS!

    சூர்ப்பனகையே 'உனக்காக சீதையைப் தரத்தான்' நான் ராமனை அணுகினேன்னு பொய் சொல்லி உசுப்பேத்தி விடுறா. அதுனால கொள்கை துறந்து/மறந்து இராவணன் காமத்துல விழுந்துட்டான்னு சொல்றதவிட, சூர்ப்பனகை திட்டம் போட்ட படியேதான் நடக்குதுன்னு சொல்லலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director