கவிதானுபவம்

இன்றொரு சிற்றிதழில் ஒரு கவிதை படித்தேன்.
ஒத்துக்கொள்கிறேன். எனக்கு கவிதையைப் பற்றி ஒன்றும் தெரியாது.
தெரியாதவற்றைப் பற்றி வாயாடுவதில்லை என்று புத்தாண்டு சபதம், ஆதனால் என் கவிதானுபவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை.

நல்ல கவிதைகள் அவற்றின் வாசகர்களை கண்டடையும் தன்மையுடையவை என்று சொல்லக்கேள்வி.

அதனால், அக்கவிதை, அதன் வாசகரை கண்டடையும் பொருட்டு இவ்விடம் இடுகிறேன்.

கவிஞர்: தபசி
இதழ்: உயிர் எழுத்து, ஏப்ரல் 2011

மண்ணில் புரண்டு கோப்பையைக் கடித்த மாவீரன்
செப்டம்பர் 13, 2010
யு.எஸ்.ஓபன் க்ராண்ட்ஸ்லாம் டென்னிஸ்
ஆடவர் இறுதிப் போட்டி
ஸ்பெயின் நாட்டின்
ரபேல் நடாலும்
செர்பியாவின் ஜோக்கோவிக்கும்
மோதுகின்றனர்
முதல் செட்டை 6-4 என
நடால் கைப்பற்ற
இரண்டாவது செட்டை
7-5 என ஜோக்கோவிக் ஜெயிக்கிறார்
மூன்றாவது செட் நடாலுக்குப் போகிறது
நான்காவது செட்டின் எட்டாவது கேம்
ஜோக்கோவிக் அடித்த
முன்னங்கை மட்டையடி பந்து
பக்கவாட்டிலிருக்கும்
எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று விழுகிறது
நடாலுக்குத் தாங்க முடியவில்லை
கீழே விழுகிறார்
புரள்கிறார்
குப்புற விழுந்து மண்ணில் கிடக்கிறார்
பரிசளிப்பு விழாவின்போது
ஜோக்கோவிக்கைப் பார்த்து

நடால் சொன்னது
'ஒரு நாள் நீங்களும்
இந்தக் கோப்பையை வெல்வீர், நண்பரே..'
வெற்றிக் கோப்பையை
உயர்த்திப் பிடிக்கும் நடால்
அதன்பின்
செல்லமாக அதைக் கடிக்கிறார்
காமிராக்கள் மின்னுகின்றன எங்கும்

Comments

  1. செம டகால்டியான பார்ட்டீதான் போல கவிதை எழுதுனவரு சாரி சாரி கவிதையாய் எழுதுனவரு!

    ReplyDelete
  2. எவ்வளவு நுணுக்கமாக ஒரு டென்னிஸ் போட்டியை இவர் பார்த்திருக்கிறார், எவ்வளு செறிவான ஒரு ஒரு கவிதை. தகவல்களை கறாராக முன்வைத்து எந்த சமரசமும் இல்லாமல் நடந்ததை நடந்தபடியே சொல்லிக்கொண்டு நடந்தே அதை தாண்டி சென்றுவிடுகிறது. அடுத்த வருடம் ஜோகோ ஜெயிப்பாரா இல்லையா என்ற விதையை நம்முள் நாட்டுகிறது. இது போல் விதை நாட்டும் கவிதையே சிறந்த கவிதை என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

    இத்தகைய மகத்தான கவிதைகளை வலைப்பூவில் இட்டு எங்கள் நிமிடங்களை செழுமையக்கிய உங்களுக்கு என்ன கொடுத்தாலும் தகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar