உளதிலதெனில்

ஒருவர்க் கொருமுகம் தாமுளதென்பீர்
ஒருவன் பலமுகம் பூணுதல் கண்டு
ஒருமெய் பிறவத னம்பொய்யென்பீர்.
தரித்தல் பொய்யெனில் சருவமும் பொய்யே!

சிறுமதியோரே முன்னொருநாளில்
கருநிறவண்ணன் விருந்தாவனத்தில்
ஒருவொரு நங்கைக் கும்தனியாக
அருளிய முகங்கள் யாவையும்மெய்யே!

உறுதிகள் மாறியும் தொடர்ந்திட உதவும்
மறதியும் மெய்யே மறந்ததும் மெய்யே
புரிவதர்க்கெளிய வகை படியாதது
குருடர் தடவிய கரிபிழையிலையே

Comments

  1. "தரித்தல் பொய்யெனில் சருவமும் பொய்யே!"
    idhu oru perspective aa irukkalam.

    "ஒருமெய் பிறவத னம்பொய்யென்பீர்."
    idhuvum oru perspective aa irukkalam illaya.

    "குருடர் தடவிய கரிபிழையிலையே"
    idhu padi avan avanukku avanoda perspective dhaan right!!!
    adhu argument maela irukka rendukkum porundhum illaya?

    "உறுதிகள் மாறியும் தொடர்ந்திட உதவும்
    மறதியும் மெய்யே"
    idha padichadukku appuram marandha urudhigal ellam nyabagam varudhu!!!

    romba sodappitaen na manuchirunga

    ReplyDelete
  2. நான் தடவினபடி நீ கயிறு தான். அதெப்படி தூணாவும், சுவராவும் இருக்கலாம்னு கேக்காதவரைக்கும் சரி.

    ReplyDelete
  3. unga kitta paesi jeyikka mudiyuma?
    neenga sonna maadhiri ellaroda karaththum avangalukkulaye irundhutta sila visahayangalukku nalla dhaan irukkum...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director