என்று சொன்னான்
சமீபத்தில் படிக்கக்கிடைத்த நாவல்கள் எல்லாவற்றிலும் எனக்கு பெரிய தடையாக இருந்தது உரையாடலில் நம்பகத்தன்மை. DH Lawrence தொடங்கி ஜெயமோகன், பாலகுமாரன் வரை. அதீத உரையாடல்களை நிகழ்த்திவிடுவதற்காக ஒரு புனைவு களத்தைத் தயார்செய்வது ஒரு பயன்படுத்துதலாகவே (using) தோன்றுகிறது. படைப்பில் dramatization நிகழாமல் நிகழவேண்டிய ஒன்று. எந்த இடத்திலும் இது 'உண்மை' என்ற மாயை வாசகனுக்குத் தொடர வேண்டும். நிகழக்கூடியதாகத் தோன்றுவதின் ஒரு துணுக்கு காண்பிக்கப்படவேண்டும். தமிழில் (என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அசோகமித்ரன்/ திலீப்குமார் போன்றவர்களின் எழுத்தில் இது காணக்கிடைக்கும். மற்ற அனேகர் எழுத்துக்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது 'இந்த இடம் வசதியாக வார்க்கப்பட்டிருக்கிறது' என்று தோன்றிவிடும்.இதை முற்றிலும் களைய நினைத்து எழுதுவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு வாள்வீசப் புறப்புடவது போன்றது. புனைவு வெளி தரும் விசாலமான சுதந்திரத்தை மறுத்துவிட்டு, verisimilitude-ஐ 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக' அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்தில் மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். பேனாவிலிருந்து தோன்ற...