அந்நியன் வந்தான் அம்மணமாக
இதைப் படிக்காவிட்டால் பேரிழப்பு என்பனவற்றைத் தவிற பிறவற்றைப் படிக்க நான் முனைவதில்லை என்றார் எமர்ஸன். வியர்வை சிந்தி படித்துவிட்டு 'நேரம் வீண்' என்ற புரிதலை எட்டுவது மிகவும் எரிச்சலானது. வந்து குவியும் எழுத்து அத்தனையும் படிக்கமுடியாததால் தெரிவு செய்யவேண்டியதாகிறது. ஆதர்ச எழுத்தாளர்களே சிலசமயம் நம் காலைவாரிவிடும்போது புதியவர்களை எங்கு நம்புவது ? நாம் மதிக்கும் விமர்சகர்களின் மதிப்புரைகள் உதவும் என்பது ஓரளவில் தான். முரண் இல்லாமல் இயங்க வேண்டிய கட்டாயத்தின் பளுவில் அவர்கள் இயங்குவதால், அவர்கள் விருப்பங்கள் நாளடைவில் இலக்கியக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு கொழகொழத்து விடுகின்றன என்பது என் செல்லத் தேற்றங்களில் ஒன்று. விருப்பு முதலில் நிகழ்கிறது. அதற்கானக் காரணத்தேடல் பிறகு. காரணங்களைத் தேடிக் கண்டடைந்து மற்றவர்களுக்கு விளக்கிட முடியும் என்ற நம்பிக்கை, நம் விருப்புகள் அறிவுபூர்வமானவை என்ற எண்ணத்தால் தோன்றுகின்றது. நம் விருப்பங்கள் அறிவுவயமாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு விருப்பம் மட்டுமே. "எனக்குப் பிடித்தது, உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படி" என்ற நண்பர்களின் பரிந்து...