Conventions of Despair
நேற்று முன் தினம் முதல் முறையாக மஹாளய அமாவாசை தர்ப்பனம் செய்தேன் அப்பா இதையெல்லாம் செய்ததில்லை. தாத்தாவுக்கு பெரியப்பா தான் செய்வார் என்பது மட்டும் காரணம் அல்ல. அப்பாவுக்கு தேவைப்பட்டதில்லை. But, Sorry, I cannot unlearn Conventions of Despair They Have their Pride நான் சாப்பிடுவதற்கு முன், சாதத்தில் கருப்பு எள் தூவி காக்கைக்கு வைத்தேன். ** அன்று புரட்டாசி உத்திரம். மகள்களுக்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த புரட்டாசியில் இன்னொரு உத்திரம் வரும். அது தான் பிறந்தநாளாகக் கணக்கு. ஆனால் அப்பா இரண்டையுமே கொண்டாடச் சொல்லியிருப்பார். மாலையில் ஒரு கேசரி செய்து நிவேதனம் செய்தோம். விசேஷங்கள் என்றுமே எனக்கும் அப்பாவுக்கும் பாசுரம் படிக்க ஒரு சாக்கு. கிருஷ்ணஜெயந்திக்கு வெறுமனே வெண்ணையில் சக்கரையை தூவிக்கலக்கி பெரியாழ்வாரைத் தூக்கி வைத்துக்கொண்டு விடுவோம். நேற்று முதல்முறையாக தனியாக பாசுரம் படித்தேன். குழந்தைகளுக்கு தலைமுடி எளிதில் கலைந்து பரட்டையாகத் தொடங்கிவிட்டது. பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் ஐந்தாம் திருமொழி பாடல்களைப் படித்து நிவேதம் செய்தேன். ...