சில கண்ணன் பாசுரங்கள்
நாளை கிருஷ்ண ஜெயந்தி. அதை முன்னிட்டு ஒரு சிற்றுரை: குறிப்பிட்ட பாடல்கள்: தாய்முலைப் பாலில் அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டுச்சென்று பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென்றே பிறர் ஏசநின்றாய் ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்த என் தூதியோடே நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே (701)