அசந்தர்ப்பம்
மலையிலிருந்து கல்லை எடுத்துவந்து தலையில் போட்டால், தலைவலி போமென்று ஒரு பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. அசந்தர்ப்பமாக இது தோன்றும். ஆனால் தலைவலியை நிவர்த்திக்கக்கூடிய ஒரு செடிக்கு கல்லையென்பது ஒரு பேரென்று அறியவேண்டும். இங்ஙனமேயுள்ள தமிழ்வைத்திய பரிபாஷைகள் மிக அதிகம் - உ.வே.சாமிநாதையரவர்கள் (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்)