டிம்பக்டூ
முன் குறிப்பு: ஐந்தாறு வருடம் முன்பு, கன்னிமை காக்கும் உக்ரத்துடன், ப்ளாக் ஆராம்பிப்பதில்லை என்று இருந்தேன். ஏன் என்று குடைந்தவர்களிடம் விளக்கம் சொல்லி மாளவில்லை. ஒரு மாதிரி "ஒழிகிறது போ" என்று கொள்கையைத் தளர்த்தி, இரண்டு வருடங்களாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறேன். முன்பொரு காலத்தில் எழுதியவற்றை வலையேற்ற பயன்படவில்லை எனில் ப்ளாகிருந்து என்ன பயன்? டிம்பக்டூ இருபத்து மூன்றில் கவிதை எழுதாமிலிருக்க முடியுமா ?