பூளை

போகிப்பொங்கலுக்கு பூளைப்பூங்கொத்தை வாசலில் செருகி வைப்பது ஒரு வழக்கம்


பெருங்காற்றிற்கு உதிர்ந்துவிடும் இதழ்கள் உடையை இப்பூ, மதில்காக்கும் உழிஞைவீரர் தலையில் அணிவதாம். 


கம்பனில் இது இரு விசேஷமான பாடல்களில் வருவதைக் காணலாம். 



பிக்‌ஷாடன உருவில் வரும் இராவணன், வேடம் கலைவதற்கு முன் சீதையுடன் ஒரு வாதில் ஈடுபடுகிறான்.

அரக்கரை உயர்த்திப் பேசும் பிக்‌ஷாடனனிடம், இராமன் விராதனை அழித்ததுபோல் பிற அரக்கரையும் அழிப்பான் என்கிறாள். அதற்கு பிக்‌ஷாடன இராவணன்,   இலங்கேஸ்வரனை உயர்த்திப் பேசுகிறான்:

சீறினன், உரைசெய்வான்,' "அச்சிறு  வலிப் புல்லியோர்கட்கு 
ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல் 
தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது, பூளைவீ என  வீவன் அன்றோ?
பிக்‌ஷாடனன் கோவமாகச் சீறினான். வலிமையற்ற விராதன் போன்றோரை ஒரு மனிதன் கொன்றான் என்று பெரிதாக நீ பேசினால், அதற்கு தெளிவான பதில் நாளையே உனக்கு கிட்டும்;  (இலங்கேஸ்வரனின்) அந்த இருபது தோள்கள் அசைந்து கிளப்பும் காற்றில் சிதறும் பூளைப்பூவாக இராமன் வீழ்வான்.

(வீ - என்பது பூவின் கடைசி நிலை; முகை -> அரும்பு -> மொட்டு -> மலர் -> பூ -> வீ )

Jump Cut

போரின் முதல் நாள் இறுதிக்காட்சி:
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

இளங்கமுகு மரத்தின் மீது வாளைமீன் தாவும் அளவு நீர்வளம் மிக்க கோசல நாடுடைய வள்ளல் இராமன் இவ்வாறு கூறினான்:  அரக்கரை ஆளும் ஐயா, உனக்கு அமைந்த படைகள் காற்றால் அறையப்பட்ட பூளைபூவைப் போல சிதறுண்டதை கண்டனை. இன்று போய் - போரை இன்னும் உத்தேசித்தால் - நாளை வா!

-----------------------------------------------------------------------------------------------------

The above is largely from a Youtube Channel I stumbled upon recently, which கம்பன் ஆர்வலர்கள் should not miss: மதுரை கம்பன் கழகம்

One Prof. Ku.Ramamoorthy does Q&A videos of 15 min duration. His coverage spans not just Kamban but also includes much on Kamban analyses texts, Valmiki, apt comparisons with Tulasi, AdhyAtma Ramayanam and obscure Vaishnava texts like PeriyavAchAn piLLai's தனி ஶ்லோகி விருத்தி - to name a few. 

Quite unlike the bombast:content ratio that is typical of தமிழ் மேடைப்பேச்சு sphere, he has a lot to say. His rendering is colloquial and accessible without being pandering. 

A thorough delight.


Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar