Posts

Axioms and Proofs

 The Buddhist literature shows that the Devas were a community of human beings. There are so many Devas who come to the Buddha to have their doubts and difficulties removed. How could this have been possible unless the Devas were human beings.                  - B.R. Ambedkar, Revolution and Counter-Revolution in Ancient India

மைந்தரின் மண்

  மண்ணிலை தேசம் என்னும் மனிதரே தேசமென்னும் வண்ணமாய் உரைகள் செய்யும் கேட்டதை மீட்டொலிக்கும் எண்ணிய மனதின் போக்கில் அவரவர் வாழ்வதற்கு மண்ணொரு திடல்தான் மன்னோ அரங்கமா நகருளானே (கலித்துறை)

Faster

Image
  I submitted docs for Passport Renewal on Bhogi afternoon. Police verification happened that very evening. There was Pongal and a weekend intervening Yesterday passport was printed and now I have received it. i.e. Within 3 working days and this is NOT Tatkal. Why are we doing this to ourselves? The folks at the Passport Seva Kendra were visibly under pressure when I was there. I got an appointment on Bhogi day when applying just the day earlier online. How many cases/day do they take on? Why is it a mere Rs.1500 to renew a passport? Isn't that what requires a whole lot of volume for the service-kendras economics to work? And what in heaven's name are these Service-Level's? Why is a policeman at my place two hours from when I submitted the application. I remember my first passport. I travelled from Madurai to Trichy and submitted papers and the 'interview' was two days later.  I had to stay in a hotel (thankfully it had StarSports unlike my no-cable-because-studies

பூளை

Image
போகிப்பொங்கலுக்கு பூளைப்பூங்கொத்தை வாசலில் செருகி வைப்பது ஒரு வழக்கம் பெருங்காற்றிற்கு உதிர்ந்துவிடும் இதழ்கள் உடையை இப்பூ, மதில்காக்கும் உழிஞைவீரர் தலையில் அணிவதாம்.  கம்பனில் இது இரு விசேஷமான பாடல்களில் வருவதைக் காணலாம்.  பிக்‌ஷாடன உருவில் வரும் இராவணன், வேடம் கலைவதற்கு முன் சீதையுடன் ஒரு வாதில் ஈடுபடுகிறான். அரக்கரை உயர்த்திப் பேசும் பிக்‌ஷாடனனிடம், இராமன் விராதனை அழித்ததுபோல் பிற அரக்கரையும் அழிப்பான் என்கிறாள். அதற்கு பிக்‌ஷாடன இராவணன்,   இலங்கேஸ்வரனை உயர்த்திப் பேசுகிறான்: சீறினன், உரைசெய்வான்,' "அச்சிறு  வலிப் புல்லியோர்கட்கு  ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல்  தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை வீறிய பொழுது, பூளைவீ என   வீவன் அன்றோ? பிக்‌ஷாடனன் கோவமாகச் சீறினான். வலிமையற்ற விராதன் போன்றோரை ஒரு மனிதன் கொன்றான் என்று பெரிதாக நீ பேசினால், அதற்கு தெளிவான பதில் நாளையே உனக்கு கிட்டும்;  (இலங்கேஸ்வரனின்) அந்த இருபது தோள்கள் அசைந்து கிளப்பும் காற்றில் சிதறும் பூளைப்பூவாக இராமன் வீழ்வான். (வீ - என்பது பூவின் கடைசி நிலை;  முகை -> அரும்பு -> மொ

Conventions of Despair

 நேற்று முன் தினம் முதல் முறையாக மஹாளய அமாவாசை தர்ப்பனம் செய்தேன் அப்பா இதையெல்லாம் செய்ததில்லை.  தாத்தாவுக்கு பெரியப்பா தான் செய்வார் என்பது மட்டும் காரணம் அல்ல. அப்பாவுக்கு தேவைப்பட்டதில்லை. But, Sorry, I cannot unlearn Conventions of Despair They Have their Pride நான் சாப்பிடுவதற்கு முன், சாதத்தில் கருப்பு எள் தூவி காக்கைக்கு வைத்தேன். ** அன்று புரட்டாசி உத்திரம். மகள்களுக்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த புரட்டாசியில் இன்னொரு உத்திரம் வரும். அது தான் பிறந்தநாளாகக் கணக்கு. ஆனால் அப்பா இரண்டையுமே கொண்டாடச் சொல்லியிருப்பார். மாலையில் ஒரு கேசரி செய்து நிவேதனம் செய்தோம். விசேஷங்கள் என்றுமே எனக்கும் அப்பாவுக்கும் பாசுரம் படிக்க ஒரு சாக்கு.  கிருஷ்ணஜெயந்திக்கு வெறுமனே  வெண்ணையில் சக்கரையை தூவிக்கலக்கி பெரியாழ்வாரைத் தூக்கி வைத்துக்கொண்டு விடுவோம்.  நேற்று முதல்முறையாக தனியாக பாசுரம் படித்தேன். குழந்தைகளுக்கு தலைமுடி எளிதில் கலைந்து பரட்டையாகத் தொடங்கிவிட்டது.  பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் ஐந்தாம் திருமொழி பாடல்களைப் படித்து நிவேதம் செய்தேன். கண்ணணுக்கு தலைவார காக்கையை அழ

Hoops of Steel

Image
வீட்ல பெரியவங்கள்ட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க “It is not true that the more you love, the better you understand; all that the action of love obtains from me is merely this wisdom: that the other is not to be known; his opacity is not the screen around a secret, but. instead, a kind of evidence in which the game of reality and appearance' is done away with. I am then seized with that exaltation of loving someone unknown, someone who will re main so forever”  ― Roland Barthes, A Lover's Discourse: Fragments

மடி

இன்று வைகாசி அனுஷம்.  திருக்குறளில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து, கண்ணில் படும் குறளைப் படித்து, அது ஏற்கனவே அறிந்ததாக இருப்பின் மூடி, வேறொரு பக்கம் திறந்து தேடிப் படித்தேன். படிக்காத புதுக்குறள் கிடைக்கும் வரை. ஓரிரு வருடங்களாக இது ஒரு புதுப்பழக்கம். இதை ஒரு அறிவுசார்(!) வழிபாட்டுச்சடங்காக ஆக்கிவிட உத்தேசம்.  இன்று கிடைத்தது: மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் அதிகாரம்: மடியின்மை குறள் எண்: 602 மடி என்றால் சோம்பல். தான் பிறந்த குடியை உயர்ந்த குடியாக ஆக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் சோம்பலை ஒழிப்பர் என்பது இன்றைய பொதுப்புரிதலில் நிலைத்துவிட்ட பொருள். மடியை மடியா - என்பது எவ்வாறு 'சோம்பலை ஒழிப்பது' என்று பொருள்படும்? எல்லாரும் 'மடியா' என்பதை வினையெச்சமாகப் பொருள்கொண்டு அப்படி உரை எழுதியிருக்கிறார்கள். சரி தான். ஆனால், 'இடும்பைக்கு இடும்பை' போன்று அத்தனை அழகாக இல்லை என்று தோன்றியது. பரிமேலழகர் உரை: நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங