ஒன்றியமும் அம்பேட்கரும்
இன்றைய தேதியில் பிரபலாமன வார்த்தை: ஒன்றியம். ' மத்திய ' என்கிற சொல்லுக்கு பதில் ' நடுவண் ' என்ற மாற்றுச்சொல்லைப் பயன்படுத்தாமல் ' ஒன்றிய ' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் முன்வைக்கப்படுவது, ' மாநில உரிமை நிலைநாட்டல் ' முழக்கத் தொனி. மேலோட்டமாக அவ்வளவுதான் என்றாலும், அதன் அடிநாதம் ' இந்தியா என்பதோர் வெற்றுக் கற்பிதம் மட்டுமே, மாநிலங்களே (மக்களே!) பௌதீக உண்மை ' என்ற மீசார்வாக சிலம்பாட்டம். ' பல தேசிய இனங்களின்(!) சிறை இந்தியா ' என்கிற ரீதியில் சங்குமுழங்கின், தமிழ்கூறு நல்லுலகில் வாக்குமகசூல் சிறக்கும் என்பது சமீபத்திய மீள்கண்டடைவு. " வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதும்! " என்ற நேருவியத்தை பழித்து ஒதுக்கியதால் பூதாகரமாக வளர்ந்துவிட்ட ஹிந்துத்வ எழுச்சி, இத்தகைய எதிர்வினைக்கு காரணம் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. இதற்கு அடிநாதமாக இருப்பது இந்த தேசியஇனச்சிறை சமாசாரங்களை உண்மையென்று நம்பக்கூடிய - தாட்சண்யமாகச் சொல்வதென்றால் - அப்பாவி மனங்களின் பெரும்பெருக்கம் இச்சொல்லைப் பூரித்துப் பயன்படுத்துவோர் ' அரசியலமைப...