Posts

Showing posts from May, 2021

உண்டு இல்லை

Image
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற கச்சிதமான இரட்டைப்புளுகு வரிகள் வழியே அறிந்ததாலோ என்னவோ நாமக்கல் கவிஞரைப் படித்ததில்லை.   அந்தப்பாடலிலேயே தமிழின் கலாசாரத் தொடர்ச்சி பேசப்பட்டிருந்தாலும் (சங்கம் முதல் பக்தி வரை), அந்த முதல் இரு வரிகள் தரும் எழுச்சி இட்டுச்செல்லும் கீழிழுக்கும் சுழல் உக்கிரமானது. அதனாலேயே ஒரு மனவிலக்கம். படித்தவரையிலும் , பிற பாடல்களும் அப்படி ஒன்றும் பிடித்தவில்லை. குழந்தைகளுக்கு தமிழ் ஓசைநயம் அறிமுகமாக எளிமையான கவிதைகள் என்பதைத் தவிர பெரிய கவிதாதிரசனம் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் சமீபத்தில் படித்ததில் பிடித்தது வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்                         நிலப்பரப்பை வேறாய் ஆண்டு வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க                         அரசமுறை வகுத்த தல்லால் ஈங்குவட இமயம்வரை இந்தியரின்                          நாகரிகம் ஒன்றே யாகும் ; தாங்கள்ஒரு தனியென்று தடைபோட்டுத்                        தருக்கினவர் தமிழர் அல்லர் ஓசை சுமாரா தான் இருக்கு. Can't hold a candle to பாரதிதாசன். But spreads a smile at the utter callous terms at whi

நம்மாளு

Image
  இன்று வைகாசி அனுஷம். அதனால் ஒரு திருவள்ளுவர் இடுகை என் வருடாந்திர வழமை. இம்முறை ஒரு Recycle. ஒரு இணையநண்பரின் blogல் இட்ட commment. அதன் ஞானப்ரகாசம் குடத்திலிட்ட விளக்காய் இராமல், வருங்காலச் சந்ததிகளைச் சென்றடையும் பொருட்டு இங்கு இட்டு சாஸ்வதப்படுத்துகிறேன். /“அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று”  / போன்ற வரியை வைத்து வள்ளுவரை யாக-மறுப்பாளர் என்று நிறுவ சமணத்தரப்பு முயன்றமையை வை.மு.கோ குறிப்பிடுகிறார்(ராம்).   Quite amusing. ஒன்றை விடச் சிறந்தது மற்றொன்று என்று சொன்னால் என்ன பொருள்? உயர்ந்தது என்று கொள்ளத்தக்க ஒன்றைக் காட்டிலும் இது உயர்ந்தது என்று தானே பொருள்படும்? வள்ளுவர் சொன்னது எப்படி 'யாக மறுப்பு' என்று பொருள்படும்?  உதாரணமாக பாரதியின் வரிகளைப் பார்ப்போம்: அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்,  பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,  அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எழுத்தறிவித்தல் ௸ உயர்ந்த தர்மங்களை விட மிக உயர்ந்தது என்றல்லவா பொருள்படும்? இதிலிருந்து ‘பாரதி பிற தர்மங்களை இடித்துரைத்

தெள்ளிய சிங்க தேவு

Image
  இன்று நரஸிம்ஹ ஜெயந்தி. இவ்வவதாரத்தின் வசீகரத்தை விளங்கிக்கொள்வதே கடினமாக இருக்கிறது. 'வசீகரம்' என்றால் காட்சி அழகைச் சொல்லவில்லை. அதை ரசிக்கும் வழிவகை அறியேன். கருத்தும், குறிப்புணர்த்துபவையும், அவை எழுப்பும் எண்ணங்களுமே அலாதியானவை. Dasavatara Cave, Ellora. Shot in 2015. விளங்கவொண்ணா முரண்களின் தொகையாக: ஹிரண்யனுக்கு கொடியவனாக, ப்ரஹலாதனுக்கு காருண்யனாக வந்தவன் - என்று பரிபாடல் முதற்கொண்டு பாடப்பட்டது நரஸிம்ஹ அவதாரம்.  ஆனால் அது ஒன்றும் இவ்வவதாரத்துக்கு மட்டுமான ப்ரத்யேக குணாதிசியம் இல்லையே. சாதுர்ய சாபங்களை முறியடிக்கும் சாகசக் கதைகள் உலகத்தில் பற்பல உண்டு.   அதிலும் தனித்துவமானது இவ்வவதாரக்கதை என்று சொல்லுவதற்கில்லை. ஆள்-அரி'யாக வந்தமை, பரிணாமக் கோட்டின் ஒரு விநோதப்புள்ளி.  அது தோற்றுவிக்கும் எண்ணம்தான் என்ன? Mythologies கவிதையில் ஏ.கே.ராமானுஜன் அவருக்கே உரிய பாணியில் எழுதிய வரி ஒரு திறவுகோல்:    A.K.Ramanujan (wiki)                            assassin  of certitudes, slay now my faith in doubt இதுதானே சாரம்.  இந்த பிரபலமான வரியின் கோணத்தில் நோக்கினால்: நவயுகத்தில், பகு