Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்
Have blog, will archive.
What follows is from a clutch of posts written at various points in time about ThillAnA MohanAmbAL - in my opinion, one of the most thoroughly enjoyable films with a distinctly homegrown aesthetic. Due to the nature of the post, you can expect all kinds of unevenness and abruptness, which the content shall hopefully compel you to bear with.
Plunge..
There were so many subtle shades in Sikkalaar that ONLY Sivaji could
have brought out. But I see it is being under appreciated precisely because it
is NOT a performance that cries for attention - which I allege are the ones
'easier' to appreciate.
The challenge scene, the silent love-sequence in the train, the "பணம் என்ன மகாராஜா பணம்" scene with Nambiar, the கலைச்செறுக்கு in general - his generally nonchalant dismissal of Vaithy won’t even look at him when saying பெரிய மனுஷன்னா மரியாதை குடுக்கலாம், உனக்கெல்லாம் எதுக்குய்யா மரியாதை), the speech at ThiruvArur ('are you kidding me' level excellence that is), the following scene where he is unable to lift his arm, the way he treats others ('அதுல என்னடா இருக்கப் போவுது' left handed dismissal of AVM Rajan who urges him to read the contract), குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு (he doesn't say that with sagely humility but in a dry distant manner), his momentary change in expression/voice when NagaiAh asks him 'மோகனா கூடவா போட்டி போடப் போற?'.
All this could seem like a 'walk in the park' precisely because he makes it seem so. A performance where the character has seeped into him so deeply that you do not notice the effort.
With only a superficial the talent needed to execute a hyperdramatic performance well, I will insist that it is much more demanding to be able to clearly clearly communicate a character where one is restricted by measured manner the aesthetic of the film demands. It's like fencing with one hand tied to the back. And Sivaji nailed it with a level of ease that is just jaw-dropping.
ThillAnA title conferment scene
போட்டி முடிந்ததும் சிவாஜி சபையில் பேசத்தொடங்குவார்...மிகுந்த மேடைக்கூச்சத்துடன் ! சிவாஜிக்கு மேடைக்கூச்சம் என்பதே ஒரு inside joke :-) பிரமாதமாக செய்திருப்பார். தொடர்ச்சியாக பேச வராது, வார்த்தைகளை தேடி தேடி சேகரிப்பார், பேச்சுவழக்கில் உள்ள வார்த்தைகளை மேடையேற்றுவார் (ங்கொப்பராண சொல்றேன்)..மோகனாவுக்கு "தில்லானா மோகனாம்பாள்" என்ற பட்டத்தை அறிவிப்பார்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம், ஷண்முகசுந்தரம் மேடைக்கு புதிதானவர் அல்ல, மேடைப்பேச்சுக்கு புதிதானவர். இதை மிக அழகாக செய்திருப்பார் சிவாஜி.
பொதுவாக தமிழ் சினிமாவில் கத்தி பாய்ந்ததும் ஏதோ குஷனில் குத்தி ஊசியைப் போல பிடுங்கிப் போடுவார்கள், அல்லது குத்துப்பட்டவர் அரை மணிக்கு வசனம் பேசுவார். கத்திக்குத்துடன் பாட்டு பாடிய கதையெல்லாம் கூட உண்டு !
ஆனால் இந்தக் காட்சியில் சிவாஜி வலியில் துடிப்பது பார்ப்பவர்களை மிரளச் செய்யும் நடிப்பு. கத்தி பாயும் காட்சியில் கிட்டத்தில் சிவாஜியும் பத்மினியும் மட்டுமே தெரிவர். அடுத்த ஒரு அகலமான ஃப்ரேமுக்கு மிக வேகமாக மாறும். தாள முடியாத வலியில் அவர் புரள, ஒரு அரை கணத்துக்கு என்ன நடந்ததென்று சூழ்ந்திருப்பவர்கள் யாருக்கும் புரியாது. பத்மினியின் அலறல் கூட கொஞ்சம் தாமதமாகவே வரும். மறக்க முடியாத காட்சி.
அதற்கு அடுத்தது ஒரு சம்பிரதாய டாக்டர் காட்சி. பத்மினி, ஏ.வி.எம்.ராஜன், பாலாஜி என்று அனைவரும் மிகையான உணர்ச்சியைக் கொட்ட....சிவாஜி தனியாகத் தெரிவார். விழிப்பு வந்து கையை தூக்க முயன்று தோற்றுப்போவார். உடம்பு முழுவதும் மேலே ஏழும் ஆனால் கை எழாது. வாசிக்க முடியாதபடி கை அவ்வாறே இருந்துவிடுமோ என்று ஏ.வி.எம். ராஜனிடம் தன் பயத்தை சொல்லுவார்.
The Aesthetic of a Bygone Era

அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.
இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- ‘இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.
கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை, நேராகக் கூடப் பார்க்காலம், "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!
தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், ராமன் எத்தனை ராமனடி play-within-a-movieல் சத்ரபதி சிவாஜியின் தன் தகுதியை மதிக்க மறுத்த எதிராளி மீதுள்ள கோவம் (கண்ணதாசன் வசனம் - you can sense a poet's rhythm in each paragraph, nah.. stanza)..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!
அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.
"வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் மோகனாவிடம் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.
சற்று முன்வரை சண்முகம்-மோகனா சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!! Did we even realize what he managed to do to us!
And APN-Sivaji routinely rise above dialogues by just giving them the right shade of emotion with the way they are said (which detractors miss as ‘dialogue-heavy’. It is a mark of clueless detractor that he can’t tell apart APN and KS Gopalakrishnan!). Sample:
"கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
"குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.
Throws us to Navarathri's drunkard in the brothel recounting his marital problems. He recalls painful memories but, that he is too distant to feel them now, is denoted in the dryness of his tone and manner: yet another scintillating Sivaji moment.
Back to Thillana..
Baliah and Sivaji
Baliah and Sivaji
பிரமாதமான tag-team!
மோகனா வண்டியில் வந்து இறங்கியதும், சண்முகம் முத்துராக்குக்கு சமிக்ஞை செய்து காண்பிப்பான். அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது :-)
தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும். That check off the screenplay tenet: quickly introduce your characters, without as much as a ‘word’ being spoken yet.

Western notes request: வைத்தி மொழிபெயர்த்ததும் :huh: "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.
தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி…again
இங்கொரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடகக் கொட்டகைக்குப் பிறகு மோகனாவும்-சண்முகமும் இங்கு தான் சந்திக்கிறார்கள்.
சிங்கபுரம் மைனர் திருந்திய விஷயம் எல்லாம் நமக்குத் தான் தெரியும். சண்முகத்துக்கு தெரிந்ததாக படத்தில் சொல்லப்படவில்லை. நாவலில் எப்படி என்று தெரியவில்லை.
சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?
அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.
ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.
ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.
இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.
கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.
அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான், வேறு வழி இல்லை.

Hospital Scene
பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது …
அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது …
ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" என்று பானுமதி சொல்லும்போது வரும் நெகிழ்வு.
முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.
ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்?
கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!

The Acting in Nalandhana
அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும். All in one moment!
பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.
ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.
எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த association.

ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the
naadhaswaram flawlessly. Whoa!
Contract Signing
Permit
me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.
பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)
மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).
இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.
இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.
இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!

Later, when he comes to regret the signing, he doesn’t want to dwell on it. He wants to move on quickly.
"நீ சொன்னே..நான் கேட்கலை"
என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.
"பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.
A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.

Heroism
ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN நம் ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.
நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் – ‘ஏன் காப்பாத்தினே?' – என்று ரமாமணியிடம் எரிந்து விழுகிறான். அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.
அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை.
முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)

The social context-age of the setting of
Thillana M
This post is
admittedly a bit digressive. The purpose is to give the social context of the
time-are of ThillAna.
Most of you are well aware of this, but I feel the youngsters who watch the movie now may receive it a tad too simply and thus under-appreciate the setting. Hence this post.
புறநாற்றில் ஒரு புலவர்
கை அது கடன் நிறை யாழே
மெய் அது புரவலர் இன்மையின் பசியே
புரவலர் இல்லை என்றால் பசி தான்.
ஒரு அரசனை ஒரு புலவர்: 'பாண் பசிப் பகைஞன்' என்கிறார் (பாணர்களின் பசிக்கு பகைவனாம்)
(முதல்) ஔவையார் ஒரு மன்னன் இறந்ததைப் பாடும்போது பாணர்களின் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது என்று பாடுகிறார்.
பலநூறு வருடங்களாக இப்படித் தான் கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.
நொபேல் பரிசுபெற்ற ப்ரித்தானிய தத்துவ எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் : "பிரபுக்களுக்கு கலை எவ்வளவு கடன்பட்டது என்பதை நாம் இன்றைய ஜனநாயகக் காலகட்டத்தில் மறக்க அனேக வாய்ப்புண்டு" என்றார் (in these days of democracy, one is apt to forget the debt art owes to aristocracy).
நாம் இன்றைய சமூக அமைப்பில் நின்று கொண்டு அன்றைய சமூக நிலைகளை நினைத்து, மேலோட்டமாக தீர்ப்பு வழங்கும் வேலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்!
இந்த அமைப்பு எவ்வளவு தூரம் தொடர்கிறது. 20 ம் நூற்றாண்டு வரையிலும் கூட.
இந்தக் கால மாற்றத்தில் சிக்கிக்கொண்ட இன்னொருவர் பாரதியார்! எட்டயபுரம் ஜமீந்தாரை (மகாராஜா!) அண்டி இருந்தார். அவருக்கு புகழ்பாட்டுக்கள், சீட்டுக்கவிகள் எழுதிப் பிழைத்தார்.அவர் சுபாவத்துக்கு அது சரிவரவில்லை. விலகி அவரை (மறைமுகமாகத்) திட்டி எழுதினார். பிறகு மறுபடியும் வழியின்றி அவரிடமே போய் நிற்க வேண்டிய நிலைமை (தன் வாழ்நாளில் இருண்ட காலமாக இதைப் பற்றி எழுதுகிறார்).
மதுரை சேதுபதி பள்ளியில், சுதேச மித்திரன் பத்திரிகையில் என்று பிழைப்புக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைமை. எதுவும் சரிவரவில்லை.
பாஞ்சாலி சபதம் சமர்ப்பணத்தில் கூட இப்படி எழுதுகிறார்.
தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.
பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று பாரதியாராலேயே கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாற்றம் நிகழ்கிறது.
('ச்சே மகாகவியை இந்த சமூகம் இப்படி பண்ணிடுச்சே' என்று மேலோட்டமாக அங்கலாய்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் அந்தக்கால சமூக மாற்றங்களைப் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த பேராசிரியர் வெங்கடாசலபதி பாரதியாரின் காலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார் - அதில் தான் இந்தக் கோணத்தைப் படித்தேன்.)
Now coming to ThillAnA
வடிவாம்பாள் நினைப்பதில் என்ன தவறு?
அவள் பார்த்து வளர்ந்த உலகம் அது. இன்று கச்சேரிக்கு சம்பளம் பேசி 'லேசில் கையெழுத்து'ப் போடாத கெட்டிக்காரி அவள். ஆனாலும் இந்தப் 'புது உலக'த்தின் நியாய/அநியாயங்கள் அவளுக்கு முழுவதுமாகப் புரியவில்லை.
ஜில்ஜில்-லையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒரு அசாத்திய திறமைக்காரி, தன்னம்பிக்கை உள்ளவள். ஆனாலும் முறையான திருமணம் என்பது அவளுக்கு இல்லை. 'உங்க ஆளு சண்டியன்' என்று சண்முகம் குறிப்பிடும் அந்த நாகலிங்கம் 'திருந்தி வருவான்' என்று அவள் நம்புவதாகப் படம் முடிகிறது. நெஞ்சை அறுக்கிறது அல்லவா அவள் நிலை?
digression within digression
மோகனாவும், சண்முகமும் எவ்வளவு எளிதாகத் துவண்டு விடுகிறார்கள். தன் சுயநலத்துக்காக சண்முகம் எத்தனை அசட்டையாக கையெழுத்துப் போடுகிறான். ஜில்ஜில் வாழ்க்கையை விடவா இவர்களுக்கு இடர்களும், சவால்களும்?

சொல்லியும் சொல்லாமலும் பல ஏமாற்றங்கள். அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள்.இத்தனைக்கும் அவள் கலை 'உயர்ந்தது அல்ல' என்ற கீழ்நோக்குப் பார்வை வேறு. சகலகலாவல்லி என்று சண்முகம் அவளை அறிமுகப்படுத்திகிறான், ஆனால் அவளை நாம்கூட இரண்டாம்பட்சமாகத் தானே நினைக்கிறோம்.அதை நாமும் கூட கேள்வி கேட்பதில்லை. சண்முகத்தின் கத்திக்குத்துக்கு பதறுகிறோம். சகலகலாவில்லி'க்கு பல் உடைந்தால் சிரிக்கிறோம்.
கொட்டகையில் அவள் சண்முகத்தை ஆழ்ந்து ரசித்ததை விடவா யாரும் ரசித்துவிடப் போகிறார்கள் ('ஆமாம் ராசா'). அவளுக்கு வாசித்ததை விட படம்நெடுகிலும் சண்முகம் யாருக்காகவாவது அத்தனை ஆத்மார்த்தமாக வாசித்தானா?
Back to வடிவாம்பாள்

தன் மகளை, ஒரு முன்னனிக் கலைஞனுக்கு வாழ்க்கைப்படுவதை விட ஒரு தனவந்தனின் ஆசைநாயகி ஆக்க இந்த அம்மாள் விரும்பிகிறாரே - என்று மட்டும் மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள் யாரையாவது சார்ந்தே வாழவேண்டியவர்கள் என்பதே அவள் காலம் அவளுக்குப் போதித்த வாழ்க்கைமுறை.
தன் மகள் நல்ல நாட்டியக்காரியாக பெயர் பெற வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவள் ஒரு பெரிய மனுஷனின் 'ஆதரவு' கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பது.
இதில் ஒன்று உயர்ந்த நோக்கம் என்றும், இன்னொன்று தாழ்வானது என்றும் நாம் நினைப்பது - இன்றைய மனநிலையில் இருந்தே. அந்தத் தாய்க்கு இரண்டும் ஒன்றே.
அந்தக் காலத்து நாட்டியக்காரி, தனக்கு சரிவர அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை, அது தன் குழந்தைக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவள் நினைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.
"என் கண்ணு! நீ ஒருத்தி கஷ்டப்படுற, உன்னால நாங்க எல்லாம் சுகப்படுறோம்" என்று ஒரு வசனம் வரும் - அவளை மகாராஜாவின் 'தங்கையை' பார்க்க அனுப்பும் ஆயத்தக் காட்சி. அவள் நோக்கம் வேறு என்றாலும் அந்த வாஞ்சை பொய் அல்ல என்றே நினைக்கத் தோன்றும்.
தனக்குத் தெரிந்த நல்வழியில் குழந்தையைச் செலுத்தவும்,தனக்கு கைகூடாதவை அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவள் விரும்புவது இயல்புதானே. Her backstory is left to our inference .
ஆனால் (தனியாக வாத்தியார் வைத்து இங்க்லீஷ் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மோகனா காலமாற்றத்தை உணர்ந்தவள். பழைய சட்டகத்தை முற்றிலும் நிராகரித்து முன்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உடையவள். அது தான் சண்டை.
சண்முகமும் வடிவாம்பாள் போல சிந்தனை உடையவன் தான். அவன் சந்தேகப்பேர்வழி, அவசரக்காரன், (மேரி சொல்வது போல) 'நாதஸ்வரம் தவிர ஒன்றும் தெரியாதவன்' என்பதெல்லாம் வாஸ்தவம். ஆனால் அந்தக் காலச் சூழலில் நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் இவ்வாறு தான் இருக்கும் என்றே பொதுவான கருத்து. அதனால் தான் சிறு விஷயங்களைக் கூட அவன் சந்தேகிக்கிறான். அவனாலும் மோகனாவின் தீர்க்கமான மனநிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.
பாவம் மோகனா - தன் காலத்தைத் தாண்ட முனைபவர்கள் அனைவரும் படும் சிரமங்களில் மிகக் காட்டமான - 'நேசர்களின் புரிதலின்மை'யை அனுபவிக்கிறாள்.
இவற்றைக் கருத்தில்கொண்டு பார்த்தால், இந்தக் கதையை இன்னும் நன்றாக ரசிக்கலாம் என்று தோன்றுகிறது.
To be clear, Vadivambal behaviour is indeed despicable - and meant to be portrayed that way.
I don’t mean to totally exonerate her - but just wanted to contextualize her. She is the product of her times and is cannot but think that that is the fate of dancers - and the best they can aspire for. Even if Mohana were to live with Shanmugam - in her opinion - he is also an artist who is dependent on patrons (consider this: quite simply what would have happened to him without Singapuram Minor Chelladurai's change of heart – he’d have lost his arm, wasn’t Vadivambal right about பெரிய மனுஷாள் தயவு?). And he also seems like an impractical madcap fellow - how could she entrust her daughter's wellbeing to such a person.
ஜில்ஜில் பற்றியும், நாகப்பட்டினம் கொட்டகையை ஏபிஎன் காட்டிய விதத்தையும் இன்னும் விரிவாக எழுதலாம்..
Ramamani
கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?
கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார்.
குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு
அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா
படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மைனரின் மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!
"வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள் ஜில்ஜில்.
"அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்
I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் frame...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் frame! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்! என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!

This film just can’t be praised enough.
சிறப்பான இடுகைகளின் தொகுப்பு! எ.பி.என்-னுக்கு கதம்ப மாலையாக சமர்ப்பிக்கலாம். படம் முழுதும் வியாபித்திருக்கும் வைத்தியின் ஆளுமை உடைப்புகளைப் பற்றி எழுதியிருக்கலாம். போற போக்கில் டூயட்டை குட்டியது நச்.
ReplyDeleteபுதினத்தைப் படித்து விடுங்கள். இந்த மாதிரி சமூக ஆய்வுக்கு (இலங்கைப் பயணம், கப்பல் குரூஸ் எனப் பல) இன்னும் நிறைய தீனி உண்டு.
ReplyDeleteWould like to add a couple of more points which skipped me.
ReplyDeleteAPN's eye for detail continues to strike me every time. You mentioned about the flux in times being brought out with quite a detail in the film. True. The film also subtly brings out the generation gap between the old and the new. In the hospital scene with Shanmugam when his brother tells him about Muthuraaku and his late night alcohol dalliances, we can see K Sarangapani, the other thavil vidhwaan in the set, looking at AVM Rajan with some anger and lifting his hands and pointing it at Rajan (a "enna payyan pA nee" kind of gesture). The thavil vidhwaans looking out for each other, finding the younger generation harping their guilty pleasures a pain :) Quite subtle IMO.
Vaithy. APN sketches the lives of Shanmugam, his troupe members, Mohana and her family with great subtlety and dexterity. But like with Jil Jil, he doesn't take pains to sketch Vaithy's life. We don't know what made him what he is, how he is able to get away from the law (finally remarking to the police, "romba nALaikki munnAdiyE edhir pArthEn. Too late. satha irungO. amma Vadivu, nAn jAmeen la varradhukku munnAdi...") and also saying he will come out on bail. However, he does tell the Maharaja, "avvidathula, club'la, race course la ellA edathulayum pAthurukkEn" suggests kind of a man he is, however the rest of the details remain hazy. And him calling Mohana Mohi :D Brilliantly etched character. Nagesh is in his element (will grudgingly accept as much).
Also, Mary has heard from her father only great things about Shanmugam. So she rightly places him in Godly status as she says. However, seeing his flawed human nature in full force, her "unguLukku nAdhaswaram mattum dhAn vAsikka theriyum pOlirukku" is as much a realization for her as is the truth.
There is so much said between the lines and left unsaid in this film. Beautifully layered film!
//This film just can’t be praised enough//
ReplyDeleteஎன்னால, முருகனைப் பற்றிக் கூடப் பேசாம இருக்க முடியும்;
ஆனா மோகனாம்பாளைப் பற்றிப் பேசாம இருக்க முடியாது;
அதனால் சற்றே பேச அனுமதி தாருங்கள்:) புகழ மாட்டேன், வெறுமனே பேசுவேன்;
பதிவை ரெண்டு முறை முழுக்க வாசிச்சேன்; பொதுவா யார் பதிவையும் இப்படி வாசிச்சதில்லை;
பதிவின் பல இடங்களில், இந்தப் படத்தின் Editor நீங்க தானோ? என்றொரு ஐயம் எனக்கு வந்து போனது; அத்தனை முறை Paused Modeஇல் படம் பார்த்து இருக்கீங்க போல:) Same here!
தில்லானா மோகனாம்பாள் வெறுமனே ஒரு "திரைப்படம்" (அ) நாவல் அல்ல;
அதில் லயிக்கணும்-ன்னா...
தமிழிசை வளர்ச்சி, அன்றைய சமூகப் பின்னணி, ஆண்-பெண் இசைக் கலைஞர்கள் -ன்னு சட்டகத்தில் இருந்து பாக்கணும்;
சிக்கல் சம்முகம், மோகனாவின் கையை, அவுங்க அம்மா முன்னாடியே புடிப்பாரு!
Can u guess how itz possible in those days?
அந்த Train காட்சியில், தானே கைப்பிடித்து, அவளை வண்டியில் ஏற்றுவதும், Train ஓடும் போது, மற்றவர்கள் முன்னிலையிலேயே, இருவரும் அத்தனை நெருக்கம் - முடியுமா அந் நாளில்?
இந் நாளிலேயே முடியுமா -ன்னு தெரியல; எங்கம்மா விட மாட்டாங்க:)
அலுவலகத் தோழிகளோடு பயணம் செய்யும் போது, அம்மாவும் ஒரு முறை வந்தப்போ, என்னடா இது இத்தனை நெருக்கம்? Gap வேணும்-ன்னு மூஞ்சிக்கு நேராக் கேட்டவுங்க:)
வருக வருக. நன்றி :-)
Delete//அத்தனை முறை Paused Modeஇல் படம் பார்த்து இருக்கீங்க போல:) Same here!//
தூர்தர்ஷன்ல வந்தப்போ விசிஆர்-ல பதிஞ்சு வைச்சு, பார்த்துப் பார்த்து தேய்ச்ச படம். டிவிடி ப்ளேயர் வாங்கினதும், வாங்கின முதல் டிவிடி.
//சிக்கல் சம்முகம், மோகனாவின் கையை, அவுங்க அம்மா முன்னாடியே புடிப்பாரு!
Can u guess how itz possible in those days?
அந்த Train காட்சியில், தானே கைப்பிடித்து, அவளை வண்டியில் ஏற்றுவதும்,
//
No. ஃப்ரேம்ல வடிவாம்பா கிடையாது. மோகனா தனியா இருக்கும்போது தான் சண்முகம் கையைப் பிடிச்சு ஏத்தி விடுவாப்ல. அதேபோல,
// Train ஓடும் போது, மற்றவர்கள் முன்னிலையிலேயே, இருவரும் அத்தனை நெருக்கம் - முடியுமா அந் நாளில்?//
என்ன பண்றது. இந்தப்பக்கம் கலியுகநந்தி முத்துராக்ககு அண்ணன் :-) அதுக்கு சண்முகம் பக்கமே உட்காரலாம். விளக்கு அணைச்சப்புறம் தானே நெருக்கம்.
ஓரளவுக்கு constraintஸை ஏபிஎன் கணக்குல எடுத்துகிட்டு இருப்பார்.
நம்ம பிரச்சனை நமக்கு. தன் மகனை சான்றோன் எனக் கேட்க விழையும் தாய்களின் கண்டிப்பு :-)
//No. ஃப்ரேம்ல வடிவாம்பா கிடையாது. மோகனா தனியா இருக்கும்போது தான் சண்முகம் கையைப் பிடிச்சு ஏத்தி விடுவாப்ல//
DeleteYes, You are correct!
அப்போ, அம்மா முன்னாடி இல்ல, சாமியாரு (SV Sahasranamam) முன்னாடி, கையைப் புடிப்பாரு:)
அம்மா முன்னாடி, கையைப் புடிப்பது, எப்போ? எப்போ?
ஆங்...in that nagapattinam manorama troupe, when both lovers fight, தோத்துப் போயி மலேசியாக்கு ஓடறீங்க-ன்னு சொல்லும் போது, கையைப் புடிச்சி இழுப்பாரு, என்னடீ -ன்னு ஏக வசனம் வேற:)
முருகா, I wanna see this film 150nth time, coz i forgot some scene sequence:) blame it on @dagalti :))
மோகனாம்பாள் = ஒரு "தாசி"
ReplyDeleteஅதனால் இது செல்லுபடி ஆயிற்று, அம்மாவின் முன்பே!
அந்நாளைய குடும்பப் பெண்கள் கையைப் பிடித்து, சிவாஜி Train ஏற்றி விட முடியாது அத்தனை சுலபத்தில்;
ஆனா, தேவ தாசி தடுப்புச் சட்டம் பற்றி பேச்சு எழுந்த கால கட்டமும் கூட; படத்தில் தாசி வீட்டு வாழ்க்கையை, மிகவும் கவனமாக் கையாண்டு காட்டி இருப்பாரு இயக்குநர் APN! அவருக்கும் அதில் முன்னோடி, நாவல் ஆசிரியர் கொத்தமங்கலம் சுப்பு;
சுப்பு, வெறுமனே Vasan Studios நிர்வாகியா இல்லாம, ஊர் ஊரா வில்லுப்பாட்டுக் கச்சேரி செய்தவரும் அல்லவா? அதான் அந்த "Openness" எழுத்தில் தெறிக்கும்;
----
தாசி = மதிப்பு மிக்கவள்
அவள் வெறுமனே "பரத்தை" மட்டுமல்ல!
அவளுக்கும் மானம்/ மதிப்பு உண்டு;
அதோடு, கலையின் கர்வமும் உண்டு;
தாசி -ன்னாலே இழிவாக்கி விட்டது பின்னாளில் தான்!
தமிழின் முதல் இரு காப்பியங்களுமே = "தாசி"யைத் தலைவியாக வைக்கத் தயங்கவில்லை;
அரசர்களைப் பாடாமல், சாதாரண மக்களைத் "தலை மாந்தர்களாக" வைத்த தமிழ்!
*சிலம்பில் = மாதவியும் ஒரு தலைவி
*மேகலையில் = Illegitimate Child is தலைவி
பின்னாளில் தான், கலையை-மதத்தோடு சேர்த்து, "இறைவன்" என்கிற பேரைச் சொல்லிச், சுயநலத்தால் மொத்த பேரையும் "தாசி" பரம்பரை ஆக்கி விட்டார்கள்!
தேவதாசித் தடைச் சட்டம் வந்துவிட்ட பின்பு எழுந்த நாவல் = தில்லானா மோகனாம்பாள்;
தாசியின் "கற்பை", கலைக் கர்வத்துக்கு இடையே, இழையோடும் மெல்லிய காதலாய்க் காட்டிய நாவல்!
சங்கத் தமிழ் இற்-பரத்தை போலவே, "தாசிக்கும் மதிப்புண்டு"!
இதைக் கொள்கை விளக்கப் படமாச் சொல்லாம, இயல்பின் போக்கிலேயே விட்டு எடுத்தது தான் அழகிலும் அழகு!
நாவலில்... இந்தத் "தாசியின் காதல்" - கதையைச் சொல்வதே சிக்கல் சண்முகம்-மோகனாவின் மகன் தான்:)
----
வெறுமனே தாசியின் கதையாக மட்டும் இல்லாது, "இசையின் கம்பீரம்" காட்டும் கதையும் கூட!
அந் நாளைய கர்நாடக சங்கீத உலகில், "நாதசுரம்" -ன்னாலே, ஏதோ "தேங்காய்-முடிக்" கச்சேரி போன்ற ஏளனம்;
வெறுமனே "கோயில்/ வீட்டு விசேஷ வாத்தியம்"; கச்சேரி வித்வான்களுக்கு இணையான இசை அதுவல்ல! - என்ற மனப்போக்கு
(சாதி என்ற பார்வை கூட உண்டு - நாதசுரக் கலைஞர்கள் "உயர்" வகுப்பினர் அல்லர்)
இந்தப் போக்கை உடைத்துக் காட்டியது = TN ராஜரத்தினம் பிள்ளை
அந்தக் "கம்பீரப்" போக்கில் தான் சிக்கல் சண்முக சுந்தரமும் தெரிவாரு:)
ஆனந்த விகடனில் தொடர்கதையா வந்த போது, கோபுலு ஓவியமாம்!
அந்த ஓவியங்கள் எனக்குக் கிடைக்காதா? -ங்கிற ஏக்கம் எனக்கு இன்னமும் இருக்கு!
//தாசியின் "கற்பை", கலைக் கர்வத்துக்கு இடையே, இழையோடும் மெல்லிய காதலாய்க் காட்டிய நாவல்!//
DeleteExactly!
//சாதி என்ற பார்வை கூட உண்டு - நாதசுரக் கலைஞர்கள் "உயர்" வகுப்பினர் அல்லர்//
Yes. சண்முகத்தோட கோவத்துல கொஞ்சம் 'chip on the shoulder' கோவமும் இருக்குன்ற மாதிரி தோணும். பரதத்தோட இருக்குற face-offலயும் இந்த 'அடிநாதம்' இருக்குறாப்ல இருக்கும்.
ஒரு சின்னக் குறிப்பு:
ReplyDeleteகொத்தமங்கலம் சுப்பு, தன் கதை படமான பிறகு, "தில்லானா மோகனாம்பாள்" படத்தைப் பாக்கவே இல்லீயாம்;
(As an author of the story, did he miss or not miss, his characters in live?)
என்னைக்காச்சும் இந்தக் கதை படமாகும்; சவடால் வைத்தி வேடத்தில் தானே நடிக்கலாம் -ன்னு இருந்தாராம் சுப்பு;
(முன்பே ஒளைவையார் படத்தில் சிறு வில்லன் வேடம், மிஸ் மாலினி படத்தில் எல்லாம் நடிச்சவரு தானே)
ஆனா, என்ன காரணமோ, விலகிட்டாரு from ஜெமினி ஸ்டூடியோஸ் (வாசன்);
பிற்பாடு, கதையைப் படமாக்க முற்பட்ட போது, வாசன் பதிப்புரிமையை ஏ.பி.நாகராஜனிடம் விற்று விட...
விகடனில் வெளி வந்ததால் உரிமை தனக்கே என்ற நினைப்பில் வாசன் இவ்வாறு செய்து விட, கொத்தமங்கலம் சுப்பு இடிந்தே போய் விட்டாராம்;
(குறிப்பா வைத்தி வேடம் தான் செய்யலாம் என்று இருந்தது)
பின்பு, பலரும் நாகேஷின் நடிப்பைப் பாராட்டிய போது, அந்தச் "சவடால் வைத்தி"-க்காக மனம் மலர்ந்தாராம் கொத்தமங்கலம் சுப்பு!:)
நான் வேற மாதிரி கேள்விப்பட்டேன்.
Deleteஏபிஎன் படம் எடுக்கத் துவங்கியபோது, சுப்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தாராம். ஏபிஎன் உரிமையைப் பெற வாசனுக்கு காசோலை குடுத்திவிட்டாராம். சுப்புவுக்கும் ஏதாவது தரவேண்டும் என்று மருத்துவமனைக்கு சென்று ஒரு தொகைக்கு காசோலை தர முன்வந்தாராம். அப்போது, அதற்கு முன் தினமே வாசன் வந்து, ஏபிஎன் தந்த காசோலையை தனக்கு தந்துவிட்டதாய் சுப்பு எடுத்து காட்டினாராம்.
Oh, Legends are Legends! Great!
DeleteBut I cudnt understand, how "selling rights" will go to the magazine instead of the author?
Dunno abt nowadays, may be அந்தக் காலத்தில், "எல்லா உரிமையும் ஆசிரியருக்கே" type of transaction?? :)
Whatever, சவடால் வைத்தி வேடங் கட்டும் வாய்ப்பு, கொத்தமங்கலம் சுப்புவை விட நாகேஷூக்குப் போனதே நல்லது:) (In My Humble Opinion)
பின்னணிப் "பலகணிப் பார்வை" போதும்!
ReplyDeleteபடத்துக்கே நேரடியா வாரேன்:)
படத்தில் ரசனை மிக்க காட்சிகள்
= பதிவில் நீங்களே ரொம்ப அழகாச் சொல்லி இருக்கீக;
= நீங்க விட்டுப் போனதை மட்டும் சொல்ல அனுமதி குடுங்க டகால்ட்டி ஐயா:)
----
பொதுவா, Love-ன்னா, காதலன்-காதலி நிறைய மனம் விட்டுப் பேசிக்கணும்
(Also ஆடல்-பாடல்-ஓடல் -ன்னு cinematic)
ஆனா, இந்தப் படத்தில் சிவாஜி-பத்மினி பேசிக்கிற காட்சியெல்லாம் பாருங்க! பேசிக்கவே மாட்டாங்க:) ஆனாலும் ஆழமான காதல்:)
இருவருமே "கலைக் கர்வம்" கொண்டவர்கள்; தங்கள் திறமைகளில் மிக்க மதிப்பு வச்சி இருக்குறவங்க!
(இவுக காதல் நல்லாப் போயிக்கிட்டு இருக்கும்; ஆனா வாயைத் தொறந்தா? பல பேச்சுக்கள் சண்டையில் தான் முடியும்:))
இப்படியொரு சோடி காதலிச்சா, அது எப்படி இருக்கும்? -ன்னு காட்டுற படம்!
அதை ஒரு முழுமையான Team Work ஆக்கிக் குடுத்தது தான் The Great Director, APN அவர்களின் ஆளுமை வீச்சு!
----
Train-இல் பாலையா அவர்கள் ஆடும் ஆட்டமும், மோகனாவின் அம்மா வடிவு பேசுற சுருக்சுருக் பேச்சும்..
இத்தனை களேபரங்களுக்கு இடையே சண்முகம்-மோகனா = பேசிக்கவே மாட்டாங்க!
ஆனா, ஒருவர் முகத்தை ஒருவர் பாத்துக்கிட்டே, அத்தனை அருகில்...காதலன்-காதலி நினைப்பால் பேசுவதையே காட்டுவாரு APN
= Why?
ஏன்னா, ரெண்டு பேரும் தெறமை மிக்கவர்கள்; வாயைத் தொறந்தாத் தான் வம்பா வருதே! அதான் மெளனக் காதல்:)
They fight and like like like each other, so much!
தஞ்சாவூர் சந்திப்பு:
வண்டி நின்னதும் சிவாஜி & Party இறங்கிக் கொள்ள, The other party proceeds on train!
அப்போ, சிவாஜி-பத்மினி விடை குடுக்கும் கட்டம், I like it soooooo much;
Train சன்னல் கம்பி
- அதை சிவாஜி பிடித்து, அவள் கையும் பிடிக்க
- அவள், தன் கையை வெடுக்-ன்னு அடுத்த கம்பிக்கு இறக்க
- இவரு, அந்தக் கம்பியும் பிடிக்க
- இப்படிக் கம்பி கம்பியா கீழ் இறங்கும் காதல்; உள் இறங்கும் காதல்
Such an intimate & lovely scene! Even relevant today (for me?)
உங்களுக்கு இல்லாத அனுமதியா :-)
ReplyDeleteஅந்தக் காட்சில 'சின்னஞ்சிறு கிளியே' பிண்ணனி இசைல வரும்.
படத்துக்கு இசை கேவி மகாதேவன். ஆனா அவர் சி.ஆர்.சுப்பராமன் மெட்டுப்போட்ட சினிமாப்பாட்டு - popculture கலந்து, ரசிக்கப்பட்டு கர்நாடகச் கச்சேரி மேடைக்கும் போய்ட்டு, திருப்பி சினிமாக்கு 'referenஸா வர்ற அளவுக்கு பிரபலம் ஆயிருக்கு பாருங்க :-)
Yes..
Deleteசின்னஞ் சிறு கிளியே reference is so musically romantic,
even in that ஜன சந்தடி மிக்க Railway Station:)
"வக்கிரம் புடிச்சவன்"
ReplyDelete= இதான் காதலனுக்கு, அவளின் தாய் குடுக்கும் பட்டம்:)
ஆரம்பமே அசத்தல்!
* மோகனா & Co வந்து இறங்குவதை, கண் சாடையிலேயே காட்டும் சிவாஜி-பாலையா = "நயன பாஷை"
* வேட்டு போட்டதுக்கு எகிறும் சிவாஜி - இதென்ன ஒழுங்குள்ள மேடைக் கச்சேரியா? கோயில் கச்சேரி-ன்னா அப்படித் தான் இருக்கும் -ன்னு சக கலைஞர்கள் சொல்லியும் புரிந்து கொள்ளாத சிவாஜியின் ஆளுமை!
* நடனத்தைப் பாத்துட்டு போங்களேன்-ன்னு simple-ஆ சொன்னதுக்குக் கூட, எகிறும் சிவாஜியின் கலைக் கர்வம்!
* என்ன தான், பத்மினி சிவாஜிக்கு ஆத்மார்த்தமா மதிப்பு அளித்தாலும், அதை reciprocate செய்யாத சிவாஜியின் வீறு:)
நாயனத்தில் எப்படி உங்க கை பேசுதோ, நாட்டியத்தில் மோகனாவின் கால் பேசும் -ன்னு யாரோ சொல்ல...
தன்னைக் "கை பேசுது" -ன்னு சிறப்பிப்பதை மறந்து, "அட, காலும் பேசுமோ?" -ன்னு ஒரு personality உள்ள காதலன்!
வேட்டுச் சத்தத்துக்கு மோகனா ஆடட்டும் -ன்னு அவன் சொல்ல,
காற்று, இடி, மின்னலுக்குக் கூட ஆடலாம், எல்லாத்திலும் லயம் உண்டு -ன்னு இவ சொல்ல...
ஆரம்பமே இவங்க காதல் = இப்படித் தான் துவங்குது:)) கடைசி வரை....
போட்டிக்கு அவனே அச்சாரம் போடுறான்!
வெறுமனே, "இருந்து நாட்டியம் பாத்துட்டுப் போங்க" -ன்னு சொன்னதுக்கா இத்தனையும்? நான் தான் அப்பவே சொன்னேனே, அவன் "வக்கிரம் புடிச்சவன்" -ன்னு தாய் சொல்ல....
அப்பவும் அவள் மனத்தில் = காதலே!
ஏன்-ன்னா காதலுக்குத் தெரியும் = அவன் மனத்தில் வக்கிரம் இல்லை!
such understanding & mis-understanding love of 2 birds!
Between these lovers, other characters also touch their peaks!
ReplyDeleteபாலையா = அவர் மார்பு தொள தொள-ன்னு ஆடும்!
தவில் கொட்டும் போது ஆட்டுறாப் போலவே, ஒடம்பின் பாகத்தை ஆட்டுறது மெத்தக் கடினம்! பாலையா is a genius!
சிவாஜியை விட மூத்தவர் என்றாலும், சிவாஜி சொல்லுக்குக் கட்டுப்படும் கட்டங்களில், ஒரு விதக் குழந்தைத்தனத்தோடு அவர் முரண்டு பிடிப்பதும்,
கை வீசாம, டொய்ங் டொய்ங் -ன்னு, பாலையா நடந்து வந்து முன்னால் நிப்பதும், sight to see:)
There is beautiful "body language" as dialogue in தில்லானா மோகனாம்பாள்!
-----
கருப்பாயி, ஜில் ஜில் ரமாமணி, ரோசா ராணி = மனோரமா
எதைச் சொல்லி எதை விடுவது?
ஜில்லு ஜில்லு... எனக்கு நாதசுரமே மறந்துரும் போல இருக்கு:)) ஏஏஏஏஏஏன்?
Hats off மனோரமா
தங்கவேலு அவர்களும் very pointed;
பொதுவா, அவரு "பேசுறது" தான் வழக்கம்; "நடிப்பது" என்பது அவர் துறையில் கம்மி தான்; ஆனா "நட்டுவாங்க அபிநயம்" -ன்னு அவரே நடிக்கும் அளவுக்கு so much action & opportunity in this film;
Talkative நாகேஷ் shines more in "villain" based comedy:) Refer அபூர்வ சகோதரர்கள்!
Even that foreigner-woman, Madanpur Maharani terms Nagesh's looks as Fraud & Snake:)
Dialogues are also a big hit in this film
ReplyDeleteநாகேஷ், மோகனா வீட்டு வேலைக்காரியை (அடைப்பக்காரி) டாவடிக்கும் போது, "இந்த வீட்டு வேலைக்காரி கூட நல்லாத் தான்டா இருக்கா" -ன்னு சொல்லும் கட்டத்தில்...
உன் பேரு என்ன? = வெத்தலைப்பெட்டி
அப்போ என் பேரு = சுண்ணாம்பு டப்பி:)
அதே போல, சிவாஜி எல்லாரையும் சிக்கலுக்குப் போகச் சொல்லிட்டு, தனக்கு மட்டும் திருவாரூருக்கு டிக்கெட் எடுக்கச் சொல்ல...
பாலையா அடிக்கும் லூட்டிகள்!
திருவாரூர்-ல்ல உனக்கென்ன தம்பி வேலை?
எனக்கு ஒரு பீடாக் கடைக் காரரைப் பார்க்கணும்!
அப்படியா? எனக்கும் ஒரு சோடா கடைக் காரரைப் பாக்கணும்:)
-------
படத்தின் துவக்கத்தில், (பேர் போடும் போது), அழகர் கோயில் காட்சிகள் எல்லாம் காட்டுவார்கள்;
Very historic & vintage! சங்கத் தமிழ்த் தொன்மமான திருமால் - மாயோன், மாயாண்டி; ஐயனார் குதிரைகள் போலவே அழகர் குதிரைகள், பதினெட்டாம் படி கருப்பு, நாட்டார் மக்கள் -ன்னு பல scene வரும்!
இன்னிக்கி, திருமால் "decent god" எனும் பெருந்தெய்வம் ஆகி விட்டாலும், அன்று எளியோர்/ பூர்வ குடி மக்களின் கடவுள் என்பதற்கு அழகர் கோயில் is the best example!
தொ. பரமசிவன் மற்றும் அ.கா.பெருமாள் ஆகியோரின் "அழகர் கோயில்" ஆராய்ச்சி நூல் is a very good example for "ஆய்வுக் கட்டுரை"!
-------
மோகனாவின் நாட்டியம் அழகர் கோயிலில் அல்லவா நடக்குது!
அதைத் தானே "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன?" -ன்னு சுசீலாம்மாவின் மயக்கும் குரல்!
அதில் கண்ணதாசன் ரொம்ப அழகா எழுதி இருப்பாரு!
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்…
தூயனே வேலவா
மாயனே சண்முகா
-ன்னு எழுதி இருப்பாரு!
அழகர் கோயில் & பழமுதிர் சோலை:
வேலவா -ன்னு முருகனைச் சொல்லி
மாயனே -ன்னு திருமாலையும் சொல்லுவாரு கவிஞர்!
எனையாளும் "சண்முகா" வா -ன்னு, "சண்முக" சுந்தரத்தை, மோகனா பாட்டிலேயே வம்பிழுக்க...
சண்முக சுந்தரம் (சிவாஜி), "அடிங்க, பேர் சொல்லுறியா புருசனை?" -ன்னு ஒரு லுக்கு விடுவாரு பாருங்க, உதட்டைச் சுழிச்சி:)
சிவாஜி சிவாஜி தான்! So Handsome!
ஹாஹா பாலையா-சிவாஜி கெமிஸ்ட்ரி பத்தி நிறைய எழுதலாம்.
Deleteதிருவாரூர்ல மனக்குழப்பத்தோட பாலையா சிக்கலுக்கும், சிவாஜி நாகப்பட்டிணத்துக்கும் பிரியும்போது 'செலவுக்கு பணம் வச்சிருக்கியாப்பா'ன்னு சாதாரணமா கேப்பார்.
'பணம் என்னன்னே பணம்...அதுக்காகத்தானன்னே இப்படி ஆடுறாளுஹ..நானும் வச்சிருக்கேன்னே...நானும் ஆடுறேன்'
கோவத்துல இருக்கும்போது, ஒருத்தர் சொல்றதை எப்படி நம்ம மனசுல ஓடிகிட்டு இருக்குற விஷயத்தோட கோர்த்துகிட்டு react பண்றோம்ங்கிறதை காமிச்சிருப்பாங்க. பிரமாதம்.
ஒரு முக்கியமான காட்சியைச் சொல்லாம வுட்டுட்டீக; அதை மட்டும் சொல்லி முடிச்சுக்குறேன்:)
ReplyDeleteமனோரமாவின் ஆட்டத்தைப் பார்க்க, மோகனா & Co வரும் கட்டம்!
ஏற்கனவே சிவாஜி, அங்கிட்டு தான் இருப்பாரு;
மோகனாவைப் பார்த்ததும், "காதல் + வெறுப்பில்", சிவாஜி அரங்கை விட்டு எழுந்து செல்ல...
மோகனா, நைசா, சிவாஜியின் துண்டை இழுத்து விட, அதைக் குனிஞ்சி எடுப்பாரு சிவாஜி! அப்போ இருவரும் முணுமுணுத்துக் கொள்ளும் காதல் காட்சிகள்;
"என்னா கொழுப்பா?"
"ஆம்ம்ம்மாம்"
"பல்லெல்லாம் கழட்டிப்புடுவேன் சாக்கிரதை; வேற எவன் கிட்ட-ன்னா இந்தச் சாகசத்தை வச்சிக்க"
"எங்கே பயந்துக்கிட்டு ஓடுறீக?"
"ஆமாம், பெரிய மகாராணி இவ, பயந்துக்கிட்டு ஓடுறோம்"
"போட்டி -ன்னு அப்போ சொல்லிட்டு, இப்போ ரோசம் கெட்டுப் போயி ஓடுறாரு, இதுல என்னை மிரட்டறாரு"
Sivaji gets stunned as she tells "ரோசம் கெட்டுப் போயி":)
Words are stuck in his mouth and he baffles & gaffles!
ஒங்கொப்புரான, ஏய் பாருடி, ஏய்...He walks away, but comes back again, and not speak, but mumbles:) Marvellous Sivaji!
-----
இந்தத் துண்டை இழுத்து விடுவது போல் தான்
நலம் தானா?-விலும் துண்டை இழுத்து விடுவாள்; ஊருக்கே அவன் காயம் தெரியும்! அவனுக்கு அவ உள்ளம் புரியும்!
But still hez an aggressive artist!
பேச வராத aggressive artist;
இவுங்க காதலில் தான், பேச்சே, ரொம்ப கம்மியாச்சே!
உணர்ச்சியின் மிகுதியில் வாழும் அவன், அவளை எப்போதுமே தவறாகப் புரிந்து கொள்ளும் வாடிக்கையை (தாசி என்பதாலோ?)
படத்தின் முடிவில் தான் உடைத்து, உள்ளம் உணருவான்!
சண்டையாகவே தொடங்கி
சண்டையாகவே நடந்து
சண்முகா என்று இறுதியில் சங்கமிக்கும் காதல்!
"தில்லானா மோகனாம்பாள்" வாழ்க!
அந்த சவால் காட்சி பிரமாதமான நடிப்பு. அதை பத்தி என்னன்னு எழுதுறது :-)
Deleteநான் குறிப்பிட நினைச்சது அந்த காட்சிக்கு அப்புறம் திருவாரூர்ல தான்ன் சந்திக்கிறாங்க'ன்றதை. அந்தக் காட்சி முடிஞ்சதும் வெளிப்படையான காதல். சந்தேகம் போன இடம் தெரியலை!
இந்த emotional discontinuity பத்தி யோசிக்காம விடுறவர் இல்லை ஏ.பி.என். கலை, அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனைகளை தூர வீசி அவங்களை இணைக்குது'ன்னு இதை விட சிறப்பா எப்படி சொல்ல முடியும்? :-)
If u havent already seen this video... The making of Thillana Mohanambal
ReplyDeletehttp://youtu.be/qrDBrcLpQQc?t=40s
The Great Director APN in action! Watch how he sculpts people!
Even Sivaji accepts so many takes, humbly!
I have seen this. I don't like the narrator's condescending tone.
DeleteYeah, The narrator kinda mocks Sivaji too, in French:)
DeleteBut, அது யாருக்கு வேணும்? APN அவர்களை நகமும் சதையுமாப் பார்க்க முடிஞ்சுதே...அந்த Thrill எனக்கு:)
I don't even have the அருகதை to comment in your blog. What an amazing post and a further amazing discussion between KRS and yourself. Just a joy to see two geniuses talking. At least I am able to follow what you speak for which I should be extremely grateful :-)
ReplyDelete//This film just can’t be praised enough.// dagalti you can't be praised enough for this wonderful post on Thillaana Mohanambal!
amas32
You are being too kind. Thank You. It just happens to be one my all time favourite movies :-)
DeleteI commented in your post just now, doesn't seem to appear hmm!
ReplyDeleteMay be you have comment moderation.
amas32
Yeah sorry, I was travelling and didn't see the comment for a while. Just published them.
DeleteStrangely this is one of my all time favorite, but i did not watch or rather understand the complete nuances of the movie, still something was always pulling me towards this movie for the past 10 years...
ReplyDeletebut from now on whenever i see this movie i can understand it completely thanks for your wonderful insights and narration...
thanks for the discussions happened in comment box too :)
நன்றி :-)
Delete