மாயனும் மன்னனும்


பஞ்சகிருஷ்ணஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தைப் பற்றி பெருமாள் திருமொழியில் குலசேகராழ்வார் பாடிய பாடல்கள் (மன்னுபுகழ் கௌசலைதன்) மிகப் பிரசித்தமானவை.

பொதுவாக ஆழ்வார்கள் எத்தலத்தைப் பாடுகிறார்களோ, அங்கு பெருமாள் கொண்ட ரூபத்தைப் பாடுவர். 

எ.டு: நின்றதது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து.. என்று நின்றகோலத்தில் திரூஊரகத்திலும், இருந்தகோலத்தில் திருப்பாடகத்திலும், கிடந்தகோலத்தில் திருவெஃகாவிலும் பாடுகிறார் திருமழிசையார்.

அவ்வாறு இல்லாமல் பொதுவாக பிற கோலங்களை, அவதார ரூபங்களையும், லீலைகளையும் பாடுவதும் உண்டு. ஆனால் ஒரு கிருஷ்ணத்தலத்தை எடுத்துக்கொண்டு  பத்து பாடல்கள் ராமனைப் பற்றி மட்டுமே பாடியது வினோதமானது.

தீவிர ராம பக்தரான துளசிதாசர் கிருஷ்ணர் கோவிலில் சென்று இவ்வாறு பாடினாராம் 

kaahai varanau chavi aap ki bhalE virAjat nAth
Tulsi mastak tab naval dhanush baaN lEvu hAth

Dear Lord, I have no words to describe your beauty, but though you have assumed the form of Sri Krishna (Nath), Tulsidas will only pray to you when you have a bow and arrow in your hand. 

Of course, குலசேகரர் அப்படி எல்லாம் இல்லை. நாலாயிரத்தின் ரத்தினங்களில் ஒன்றான தேவகி புலம்பல் எல்லாம் எழுதினவர் அவர் தான்.

"பின்ன எதுக்கு நீட்டி முழக்கி துளசிதாசரை எல்லாம் கொண்டு வந்த?" அப்படின்னா, வழக்கமான பதில்தான், படித்ததில் பிடித்தது.

Also தமிழ்'படுத்த'லாம்னு தான்.

சொல்லொன்று இல்லையே நின்னெழில் பாடிட துவரைநாதா  
வில்லம்பு ஏந்தியோன் தன்னையே பாடுவான் துளசிதாசன்


Comments

  1. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar