வண்டு பாயும் திட வேலவன் தென்மலை

பூங்குழல் மொய்க்கும். அது தெரியும்.
என்னதான் மிகைக்கூறல் அழகை படித்து ரசிக்க முடிந்தாலும், தலைவி தலையை வண்டு மொய்ப்பதை நினைக்க கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும். அந்தத் திகிலை படம்பிடித்த கவித் தருணங்களும் இருக்கலாம்,  என்று எண்ணிக் கடந்ததுண்டு.

இன்று தட்டுப்பட்டது:

வண்டை தலைவி தலைவி பூங்குழல் மீது ஏவி விட்டால் பாயுமன்றோ?
ஆ! ஈதென்ன விபரீத சண்டைக் காட்சி? ஏவுவது யார்?
மற்றொரு தலைவி, யார் சொன்னால் காட்டு வண்டு கூட கேட்குமோ, அவள்
வள்ளி v தேவானை

பரிபாடல் 9, 36-45

...வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை
குறுகல் என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப   

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே
வெறி கொண்டான் குன்றத்து வண்டு


கதை/சொற்பொருள் எல்லாம் நீங்க இங்க பார்த்துக்க வேண்டியது.
(Sidenote: excellent site!)

கோதை(மாலை)யைக் கொண்டே அடிவிழுவது, இரு தேவியரது மயில்களும் (தனித்தனி வாகனங்கள், கவனிக்க!) மோத, சண்டை துவங்குகிறது.

இதற்கு அடுத்த பாடல்களில் பாங்கிகள் மோதுகிறார்கள்.
இந்த  வண்டுப்பாய்ச்சலை முதல் தாக்குதலாகக் கொள்ளலாம்.

மொட்டை மலை பரங்குன்றத்தை, வண்டுலாவு அடர்வனக் குறிஞ்சியாக மறுகற்பனை செய்தபடியால் கைகூடியது இந்த அழகிய 'போர்'க்கணம்.

Comments

Popular posts from this blog

Drums Mani

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director