நடுவு நிலைமை

சிதிலமாய் போகுதிந்த சீர்மிகு தேசமென்பார் மதிலமர் பூனைபோலே அமர்ந்திடல் ஆகாதென்பார் பதிலிட வேண்டும்இதுவோர் சரித்திரக் கணமாமென்பார் இதிலுமே மௌனம்காத்தால் இளித்திடும் வேஷமென்பார் "'முதலிலே எல்லாம்நன்றாய் இருந்ததே பின்னர்நீசர் கதலியில் ஊசிபோல புகுந்ததாய்' சொல்லும்கதைகள் எதிலுமோர் பேதமுண்டோ?" எனவொரு கேள்விதோன்றின் அதிலுறை உண்மைதன்னை மன்றிலே உரைத்தலாகா வகை: கலி-விருத்தம் No pun intended.