Posts

Showing posts from 2010

டிம்பக்டூ

முன் குறிப்பு: ஐந்தாறு வருடம் முன்பு, கன்னிமை காக்கும் உக்ரத்துடன், ப்ளாக் ஆராம்பிப்பதில்லை என்று இருந்தேன். ஏன் என்று குடைந்தவர்களிடம் விளக்கம் சொல்லி மாளவில்லை. ஒரு மாதிரி "ஒழிகிறது போ" என்று கொள்கையைத் தளர்த்தி, இரண்டு வருடங்களாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறேன். முன்பொரு காலத்தில் எழுதியவற்றை வலையேற்ற பயன்படவில்லை எனில் ப்ளாகிருந்து என்ன பயன்? டிம்பக்டூ இருபத்து மூன்றில் கவிதை எழுதாமிலிருக்க முடியுமா ?

Two Quotes

Owen had always thought of himself as a rational person, capable of perspective. As a schoolboy, he'd read Othello. O, beware, my lord, of jealousy! It is the green-eyed monster, which doth mock the meat it feeds on . What paltry aid literature turned out to be when the feelings were yours and not others' - Devotion a short story from the collection: You Are not a Stranger Here by Adam Haslett ----------------------------------------------------------------------------------------------- Time To Stop - AK Ramanujan There are times when going to museums makes you see pointilliste anthills, Picasso faces on milkmen framed in the living room window, a violet shadow all around a dead or dying cow and you come back at night to see how it looks under the gaslight, and after an accident, blood looks remarkably like fresh paint. Then it’s time to stop going to museums

அவுங்க வீட்டு ராமாயணம்

Image
ஆனந்த் ராகவ் எழுதிய ' ராமகியன் ' புத்தகத்தை நேற்று படித்தேன். நன்றாக எழுதப்பட்ட, சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பிய புத்தகம்.தமிழ்சினிமா விமரிசன பாரம்பரியத்தைப் பின்பற்றி உள்ளடகத்தில் பிடித்துப்போனவற்றை மட்டும் இங்கே சொல்லிவிட்டு, முத்தாய்த்து வைக்கப்போகிறேன்.நிஜ விமர்சனம் வலையுலகில் வேறு யாராவது எழுதாமலா விட்டிருப்பார்கள்.? தென்கிழக்காசியாவில் ராமாயணக்கதை பரவியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் தாய்லாந்தில் ராமகியன் (Ramkien) என்ற பெயரில் நிகழ்த்துகலையாக வழங்கப்படுவதைப் பற்றிப் பிரதானமாகவும், பிற ராமாயணங்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.

தீதும் நன்றும்

Another lazy post to keep the ball rolling. Whenever I think of the word responsible, I can't help think of the word 'held' preceeding it. Cassius : The fault, dear Brutus, is not in our stars But in ourselves, that we are undelings Julius Caesar (I, ii, 140-141)

Mondayed

Image
கிளரொளி இளமை விழுங்குது அலுவல் நளிர்கய முதலை கதுவிய பொழுதில் பிளிறிய கரியை உதவிய திருமால் அருளது வேண்டும் அலறுவ தற்கே From Attenborough's Gandhi: Advocate : Could I ask you what provision you made for the wounded? Gen. Dyer : I was ready to help any who applied. Advocate : General, how does a child shot with a 303 Lee-Enfield "apply" for help?

இன்செப்ஷன் 1

Image
'பொய்யாய் பழங்கனவாய்ப் போனது காண்' - என்று பட்டினத்தாரை மேற்கோள் காட்டி ஸ்வயசரிதையைத் துவங்குகிறார் பாரதி. அங்கலாய்ப்பு ரசிக்கத்தக்கது. ரசித்தாகிவிட்டதா, இப்போது கவிதையைக் ஈவிறக்கமின்றி கூறுபோடுவோம்:பழங்கனவாய்ப் போனது எது? வாழ்வில் நிகழாத சாத்தியங்களா, அல்லது நிகழ்ந்து கடந்துவிட்டவையா?

Of Woody, Kambar, Rorschach and Yours Truly

Image
Some stiff stuff ahead. You have been warned There is something inexplicably tragic about the fact that each rasika's experience of a work of art is different. It renders an artist's attempt to manipulate the viewer/reader's experience into a pre-determined mould, not only infra-dig but also impossible. That an artist can have no consideration whatsoever about what the receiver's experience ought to be, is something I find hard to swallow. I can at best agree with the argument that such lack of consideration does not necessarily proceed from artistic pride, but due to the sheer impossibility of knowing what kind of experience one's art invokes in the one receiving it.

Kids Swear They are Older

Statistical evidence indicate that a vast majority of pre-teen Americans tend to actively seek informal learning channels to expand their vocabulary of expletives. It has been observed that the growth rate in this section of the pre-teen's vocabulary happens at a pace which is significantly higher than that of overall vocabulary and is often times unrelated to presence or absence of learning disorder in the subject. Researchers in the the Truism Development Lab (TDL), University of Obvious have been working since 2005 applying psychometric analyses with advanced neural net algorithms to identify patterns in teen behaviour captured through expertly designed surveys. These groundbreaking techniques have been able to minimize dependence anecdotal evidence. Prof. {white-ish name} the founder of TDL and research scientists {Indian Name} and {Chinese Name} made waves with their article: Evolution of nefarious vocabularic tendencies in pre-teens . in the recent issue of Journal of {I ex

5/7 > 2/7

You are what you do....on weekdays. கோலமகட்துணை ஏற்றவனை மாறிடவிலகிட வாழ்த்தியபின் காலமகட்டிய நட்பதனை தேறல்நெருக்கிய மாலைகளித்(து) ஆழச்சுழட்டிடும் காவிரியில் துடுப்பாடியும் செல்வழி மாற்றமிலை -அது போலசிறுச்சிறு நினைவுகளைத் தேக்கிதிரும்பிய திங்களிது

Drums Mani

This post is to bid to elucidate the roots of admiration that explain the etymological roots of this blog John Wayne said ' In all my films, I have played John Wayne. And I have done rather well, haven't I ?" On the other hand, Oscar Wilde most famously said " I put my genius into my life I put only my talent into my works ". Two contrasting schools. But what happens when the artist in question is genius personified ? If the previous paragraph sounded sophomoric, well you guessed right. It was the gist of the opening paragraph of a piece I tried writing when in college, titled : " Of Wayne, Goundamani and Wilde ". The intended recipient was "The Hindu" of indhula-sandhula fame. The paper had published an article the previous week hailing a then hot comedian which was a tad too effusive in praise for my taste. So I had set about trying to right wrongs.Of course, the article with the rejection slip came back home before I was even back from

Neela Padmanabhan and Kazuo Ishiguro

I just started reading Neela.Padmanabhan's thalaimuRaigaL.VAnathi charged me a princely Rs.120 for what they claim is one of the all time best Tamil novels. I had just finished Kazuo Ishiguro's short story collection Nocturnes (faber and faber Rs.499/-) Q: O what kind of man names prices of books he reads? A: Well, an angry one: Neela Padmanabhan's foreword showcases a writer who is quite conscious of his craft and the need to wield it with care. He takes strong exception to the practice of the narrator (or the author's voice in 3rd person novels) manifesting himself at the expense of the characters' credibility. His choice of dialect and expressions are dictated by his familiarity with the province and people. He was refuses to go all out in creating in completely unfamiliar territory. Regardless of whether this is ideal or not, that this is dictated by a commitment to credibility was something that I found impressive. And - here is the cherry - the n

Like a Child

It is that time of the year again. The day we celebrate the child god. And quite unlike other birthday festivals like Christmas, Vinayaga Chathurthi, Ramanavami etc. this one feel special, because there is special emphasis on the child-God Himself. i.e. not a child who shall one day grow-up and become the God commanding awe. Which is why the feeling of celebration and endearment, come so naturally without piety and its attendant grown-up-ness. As has become an annual custom I was reading periyAzhwAr today. Arguably the most pleasing, universally appealing , easy-on-the-cerebrum poems in the divya prabhandham. And sheer delight. In an earlier post I had written about the appeal of celebrating the omnipotent as a child. PeriyAzhwAr explores various facets of this in several poems, which I will try to give some examples in the rest of this post. YasOdhA, after witnessing the various of acts of the Lord is afraid to nurse him. A whole decad of poems end with the refrain .. உன்னைஅறிந்துகொண

Giving and Receiving

Image
Today is ONam. The day Mahabali comes from the netherworld that Trivikrama pushed him into, to see his subjects live well. The just and fair King who was 'tricked' by Vishnu. The man who 'gave' to the Lord himself. கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் மண் தா என இரந்து மாவலியை , ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில் ஆரம் கை தோய அடுத்து Would anyone but blame The one who received Than the One Who gave? is a feeble translation of the first line of this pAsuram from Poigai aazhvAr's 'mudhal thiruvandhAdhi'.The rest of the lines talk about the how when Mahabali seals his promise with the ritual of water exchanging hands, the midget Vamana rose to the imposing form of Trivikrama, whose shoulders brushed with the heavens. Why did Vishnu have to defeat Mahabali ? Where is the 'defeat' of evil, in this whole thing? Why resort to devious trickery to fool such a noble man? Kamban, even puts a different spin on it. He says Mahabali was awa

Wodehouse Tag

This is a self imposed tag (finally this is what I have come to). Found it when randomly bloghopping. The idea is to pick an author/band and answer all questions only with book titles/song titles. Pick Your writer: PG Wodehouse Are you male or female? Bachelor's Anonymous Describe yourself: A Gentleman of Leisure How do you feel about yourself? : Heart of a Goof Describe where you currently live: Hot Water If you could go anywhere, where would you go?: Blandings Castle Your best friend is: The Old Reliable Your favourite colour is: The Girl in Blue You know that: Pigs Have wings What's the weather like: Heavy Weather If your life was a TV show, what would it be called? Nothing Serious What is life to you? Laughing Gas What is the best advice you have to give? Leave it to Psmith If you could change your name, what would it be? Bill the Conqueror Your favourite food is: Eggs Beans and Crumpets Must admit I haven't read 3,9 and 14 but what the hell.. If you have read thus fa

கில்லாடியின் கலைத்தேடல்

" சென்லூயிஸ்ல ப்ளூஸ் ம்யூஸிக் ரொம்ப ஃபேமஸ். ஒரு நல்ல ப்ளூஸ் பார் எதுக்காவது கண்டிப்பா போயிடு " என்று சொல்லி அனுப்பி இருந்தார் ஒரு நலவிரும்பி. இருக்கப்போகும் ஒரு வாரயிறுதியில் அவ்வூரின் கலாசாரத்தை எல்லாவிதத்திலும் சுவைபார்த்துவிடும் திட்டத்தோடு இருந்தேன். மார்க் ட்வைன் எழுதிய மிஸிஸிப்பி நதி, லூயிஸ்-கிளார்க் பயணம் அருங்காட்சியகம், அறிவியல் மையம் போன்ற தேர்ச்சி எதுவும் தேவைப்பாட, பயணிக்குறிப்புகளுக்கு ஏதுவான இடங்களெல்லாம் முடித்தாகிவிட்டது. உள்ளூர் கார்டினல்ஸ் பேஸ்பால் அணியினரின் ஆட்டத்தைப் பார்க்கும் நூறு டாலர் ஆர்வம் எல்லாம் இல்லை. அதனால் அன்றிரவு ப்ளூஸை ஒரு கை பார்த்துவிட வேண்டியது என்று முடிவு செய்தேன். ஊரே பேஸ்பால் பார்த்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அன்று மாலை சகல உணவகங்களும் வெறிச்சோடிக்கிடந்தன. பசியோ, கால்வலியோ வலுக்கும் வரை தேடி நடக்கும் உத்தேசத்துடன் நடந்தேன். லைவ் ம்யூஸிக் என்று விளம்பரப் படுத்தியிருக்கும் இடங்களாக ஜல்லடைப் போட்டு கடைசியில் ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தேன். பேஸ்பால் மைதானத்திலிருந்து உற்சாகக்குரல்கள் கேட்கும் பந்தெரி தூரம்.அது ஒரு சின்ன வீடு போல் இருந்த

உளதிலதெனில்

ஒருவர்க் கொருமுகம் தாமுளதென்பீர் ஒருவன் பலமுகம் பூணுதல் கண்டு ஒருமெய் பிறவத னம்பொய்யென்பீர். தரித்தல் பொய்யெனில் சருவமும் பொய்யே! சிறுமதியோரே முன்னொருநாளில் கருநிறவண்ணன் விருந்தாவனத்தில் ஒருவொரு நங்கைக் கும்தனியாக அருளிய முகங்கள் யாவையும்மெய்யே! உறுதிகள் மாறியும் தொடர்ந்திட உதவும் மறதியும் மெய்யே மறந்ததும் மெய்யே புரிவதர்க்கெளிய வகை படியாதது குருடர் தடவிய கரிபிழையிலையே

Restarting Reading

Birthdays are notorious as they bring up the dreaded ' what am I doing ' questions. I usually body-swerve these introspective annoyances as they inevitably lead to some resolution or the other. And resolutions are for commonfolk. But then haughty dismissal of the common is also getting common, so I thought I'd get one up on that this time. I observed that five minutes into a conversation with anyone, I start grumbling about not having enough time to read. That becomes my cue to jump to halcyon student days and I start holding court . And when I pause for breath, the audience in question sports a genial party smile and says: "nice meeting ya". If talking about reading is bragging, talking about not being able to read is worse. It would be an admission of being an - pardon the translation - asafoetida box. So, like a makeover movie's fulcrum scene, where one 'takes charge of life' etc. I made a resolution: to channel all available free time (whatever li

Akam 401

What she said From yonder hills where the buzz of the swarming bees in unmanned orchards stave the cows from grazing and thus leaves the calves unfed and weak he came on his horse . Dark as the clouds of doomsday silver anklet and piercing gaze. And pray, does he know that, just as Death (who wields a spear like his gaze) In the end collects every warrior In his battlefield I too shall have to go Decked in flowers? What he said Your place or Mine

ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

ப்ளாக் வைத்திருப்பதன் உயரிய நோக்கங்களில் ஒன்று எழுதுபவன் (எழுத்தாளன் என்ற பதத்தைத் தவிர்க்கும் என் அடக்கம் யாருக்கு வரும்?) முன்னெப்போதோ கிறுக்கிய லாண்டரிக்குறிப்பு வரை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைப்பது. படித்த நூல்களைப் பற்றி எழுதுவது அபாய சாத்தியங்கள் உள்ள நல்ல பழக்கம். எழுதுவதற்காகப் படிக்க உந்தினால் நல்ல பழக்கம். " உன் வாசக அனுபவம் இவ்வளவுதானா? " என்று படிப்பவர்கள்/ படிக்கப்போகிறவர்கள் (மேற்சொன்ன வருங்கால சந்ததியர்) சொல்லிவிடக்கூடிய அபாயமும் உண்டு. 'உலகம் இதன்மேல் கவனத்தைக் குவித்தாகவேண்டும்' என்ற நூல்களைப் பற்றி எழுதினால் தான் இந்தப் பிரச்சினை. கிட்டத்தட்ட 'உள்சுழற்சிக்கு மட்டும்' என்ற வகை புத்தகத்தைப் பற்றி எழுதினால் ஒரு மாதிரி சமாளித்துவிடலாம். ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான் சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து அப்பாவின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வே

வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்

சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும்போது இலக்கியம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறது அல்லவா. எனக்கும் அப்படியே. அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும். வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம். .. - சுஜாதா - இலக்கியச் சிந்தனை '75 சிறுகதைத் தொகுப்பு முன்னுரை. இலக்கிய சிந்தனை அமைப்பு ஒவ்வொரு மாதமும், அம்மாதம் பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வருடமும் அப்பன்னிரெண்டு கதைகளில் ஒன்றை தேர்வு செய்து பரிசளித்து, பன்னிரெண்டு கதைகளைச் சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. தேர்வு செய்பவர் தன் தேர்வை விளக்கி முன்னுரை எழுதுவது வழக்கம். ‘75ல் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவர் சுஜாதா. (அவர் தேர்வு செய்தது வண்ணதாசனின் தனுமை). அந்த முன்னுரையின் தெளிவும், சரளமும் அவரில்லாத வெறுமையை இன்னும் அடிக்கோடிடுகின்றன. சில பகுதிகள்: நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் யோக்கியமாக மற்றவர் கதைகளை படிக்கிற ஜாதி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் பொழுதுபோக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளை படித்து

Thoughts sparked by: Sadayam

Image
"Let us not put these faces through change" These are the words of Sathyanath (Mohanlal, in a brilliant performance), in the pivotal murder scene in the film Sadayam (1992) The evanescence of what one is, is arguably one of the more tormenting aspects of the human condition (flavor du jour for me for a while now). There are those blessed few who seem comfortable in a bulwarkless existence. But I can't help suspecting them of ignorance. How can change not be scary to anyone? As the cliché goes: 'We become what we despise'. But that by itself is not scary. What is is, we do not strongly despise what we have become, because what we see depends on what we are. A story - by getting meta on everyone it shows - seems to delude us into believing we can see ourselves as others see us. But, apart from temporary indulgences, memory doesn't yield to this. It has a survival function written into it by evolution. Which is why judgement is always the luxury of the third pers

Two tongues and nothing to say

Bi-glot I am and vain Lose many(!) a loyal reader Should I cleave the blog in twain To suit their RSS feeder? But often I feel I'm done No urge to write anew While I'm okay not writing one It'll kill me to not write two! PS: I am so done I make posts out of my own comments

Clap Now!

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் உளந்தொட்டு (இ)ரணியன் ஒண்மார் வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி ! When Hiranyan tapped the pillar strong Out you came in imposing form Of a lion, wide open his chest you tore With these little hands I adore Clap my darling! Who suckled the demoness To Death Clap! Among the several stages in piLLaithamizh, one of the stages is the 'chappANi paruvam' which refers to the phase when the child learns to clap its hands together (chappANi).PeriyAzhwAr's piLLaithamizh songs are among the pAsurams that interest me the most. The philosophic nuances of, say a, nammAzhwAr earns more reverence, on the other hand, some of periyAzhwAr's songs are more visceral in their appeal and direct and simple. Some examples before I proceed: ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான் To all the world's fair praise Like a princess I did raise The

Ghoti Seauton

"Fish...saar" she responded to my inquiry with a toothy grin. I knew my caterer math. They were supposed to bring in non-veg dishes only on Tuesdays and Thursdays. This was one blue Monday and my colleagues and I were in queue holding our plates inmate style. As I prepared to move on, as I must, she added: "vegetarian saar". She was trying to be helpful but ended up being quite befuddling till she elaborated "It is made of paruppu (dal), shaped like a fish-head". Now, I am not sure who the target audience was. To those who relished real fish, this was one bad joke. To chronic vegetarians, the very sight of a fish is a worse joke - not to mention bad manners: playing with food and all that. It is only those habitual vegetarians with negotiable moral values, like yours truly, who felt inclined to give it a try. Moreover in my case there was an additional motive. There seemed to be, on the caterer's payroll, someone who dished out - couldn't resist th

என்று சொன்னான்

சமீபத்தில் படிக்கக்கிடைத்த நாவல்கள் எல்லாவற்றிலும் எனக்கு பெரிய தடையாக இருந்தது உரையாடலில் நம்பகத்தன்மை. DH Lawrence தொடங்கி ஜெயமோகன், பாலகுமாரன் வரை. அதீத உரையாடல்களை நிகழ்த்திவிடுவதற்காக ஒரு புனைவு களத்தைத் தயார்செய்வது ஒரு பயன்படுத்துதலாகவே (using) தோன்றுகிறது. படைப்பில் dramatization நிகழாமல் நிகழவேண்டிய ஒன்று. எந்த இடத்திலும் இது 'உண்மை' என்ற மாயை வாசகனுக்குத் தொடர வேண்டும். நிகழக்கூடியதாகத் தோன்றுவதின் ஒரு துணுக்கு காண்பிக்கப்படவேண்டும். தமிழில் (என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அசோகமித்ரன்/ திலீப்குமார் போன்றவர்களின் எழுத்தில் இது காணக்கிடைக்கும். மற்ற அனேகர் எழுத்துக்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது 'இந்த இடம் வசதியாக வார்க்கப்பட்டிருக்கிறது' என்று தோன்றிவிடும்.இதை முற்றிலும் களைய நினைத்து எழுதுவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு வாள்வீசப் புறப்புடவது போன்றது. புனைவு வெளி தரும் விசாலமான சுதந்திரத்தை மறுத்துவிட்டு, verisimilitude-ஐ 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக' அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்தில் மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். பேனாவிலிருந்து தோன்ற

Kasparov on Talent

The “freestyle” result, though startling, fits with my belief that talent is a misused term and a misunderstood concept. The moment I became the youngest world chess champion in history at the age of twenty-two in 1985, I began receiving endless questions about the secret of my success and the nature of my talent. Instead of asking about Sicilian Defenses, journalists wanted to know about my diet, my personal life, how many moves ahead I saw, and how many games I held in my memory. I soon realized that my answers were disappointing. I didn’t eat anything special. I worked hard because my mother had taught me to. My memory was good, but hardly photographic. As for how many moves ahead a grandmaster sees, Russkin-Gutman makes much of the answer attributed to the great Cuban world champion José Raúl Capablanca, among others: “Just one, the best one.” This answer is as good or bad as any other, a pithy way of disposing with an attempt by an outsider to ask something insightful and failing

Contented Reader

Wodehouse contesting Dr.Samuel Johnson's claim that no reasonable person would write for considerations other than money: I should imagine that even a man who compiles a railway timetable is thinking much more about what a lark it all is than of the cheque he is going to get when he turns in the completed script. Watch his eyes sparkle with an impish light as he puts a very small a against the line 4.51 arr. 6.22 knowing that the reader will not notice it and turn to the bottom of the page, where it says (a) On Saturdays only but will dash off with his suitcase and golf clubs all merry and bright, arriving in good time at the station on the afternoon of Friday. Money is the last thing that such a writer has in mind. - Wodehouse on Wodehouse I know there are a whole lot of writers whom I have not read and perhaps never will. But the more I read Wodehouse the less I care about that.

Appraisal in PuranAnooRu

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி, வாய்வாள் பற்றி நின்றனென்’ என்று, சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்! ஈண்டே போல வேண்டுவன் ஆயின், ‘என்முறை வருக’ என்னான், கம்மென எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே. - புறநானூறு (292) Warriors line for the rationed beer Some men raise concern: "He breaks the queue, 'should be made clear. Discipline he should learn" "Blades of grass you are, I fear Tame your belly burn When the battle call rings loud and clear He waits not for his turn"

படிமக்கோவை

ஒரு மாலைப்பொழுதில் நுங்கையிலிருந்து வடபழநி நோக்கி நடந்து கொண்டிருந்தேன். புழுதிக்களேபரத்தைத் தாண்டி கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக ஏறினால் உச்சியில் நின்றபடி மனிதப்புழுக்களைப் பார்க்கலாம். லொயோலா கோபுரத்தைப் பார்க்காமல் கீழே ரயிலிலும், தி.நகரிலும், மேனகா வாழ்த்து அட்டை சமீபக்கட்டிடங்களின் மாடியிலும் என்று அடைத்துக்கொண்டு இருக்கிறவர்களைப் பார்த்தபடி தொடர்ந்து நடந்தால், புழுதிசூழ் பயங்கெழு மாநிலமாம் சேகர் எம்போரிய வாசலில் தரையிறங்கிவிடுவேன். மன்னா போளிக்கடை, ஹாலிவுட் பிரியாணிக்கடை, அம்பேத்கர், நெற்றியில் விபூதி வரைந்து கழுத்துப்பட்டி அணிந்த கைரேகை ஜோதிடர் என்று வரயிருப்பவற்றின் அட்டவணை வேகமாக முன்னால் ஓடியது. மனதின் முன்னோட்டத்தை முறியடிக்கும்படி ரங்கராஜபுரத்தில் காலிட்டுச்செல்லும்படி செல்ல வேண்டும் என்று எண்ணம். பாலத்தின் கீழ் உஸ்மான் சாலையில் போகாத சந்து எதற்குள்ளாவது போயிருக்கலாம். ஆனால் பாலம் ஏறியாகி விட்டது, இனி இறங்கிய பிறகு தான் பாதையை மாற்றிக்கொள்ள முடியும். உஸ்மான் சாலை முடிவில் குளியல் சாதனக்கடையின் பெயர் கில்மா (சின்னி ஜெயந்த் பங்குதாரர் என்பது என் துணிபு), அதைத் தாண்டி ஸ்டால

Flippin'

It seems I am compelled to explain to the world why I - to borrow the words of Monty Python - flatulate in the general direction of T20. When allegedly self-respecting cricketers participate then it is respectable, no ? Experts write about it. India is good at it - we won the first 'world cup'. It is a change of guard they say. It is blancophilic, pro-colonialist to stick to old sober formats. It is elitist to deride the face-painting six-hollerers. Needless to say it is anti-feminist too. For all ye near extinct cricket lovers, don't you think the bookcricket world cup is up next ? Imagine India winning and then some extrapolation about who should retire will possibly be made. And then I expect self-respecting journalists writing insightful articles about this: It is a format that really challenges the technical acumen of the players and the captain. You need to adapt the flipping techniques on the fly factoring in the texture of pages, tuning the nimbleness of the flippin

27

The pheasant cries As if it just noticed The mountain -Koboyashi Issa

Pluckation

Int. Day. Restaurant at the end of the universe Me : Please cancel my order Waiter : Sir... Me : Yeah... Waiter : சொல்லியாச்சு சார்..இதொ வந்துரும் Me : இதையே தான் சொல்லிட்டிருக்கீங்க அப்பொலேர்ந்து..நானும் உட்கார்ந்திருக்கேன் கோயானாட்டம் Waiter : சாரி சார் Me : என்ன சாரி...this is ridiculous...ஒரு epiphanyக்கு இவ்வளொ நேரமா ? Waiter : எல்லாரும் அதே கேக்குறதுனால கொஞ்சம் டயம் ஆவுது சார்...இதொ வந்துரும் Me : அப்பொ நீங்க முதல்லயே சொல்லணும்ல...இது லேட்டாகும் வேண்டாம்னு... I want to see the manager Waiter : இல்ல சார்...நல்லா டேஸ்டா இருக்கும் சார் Me : ஹ்ஹ்ம்ம்.....சரி..இங்க நிக்கிறதுக்கு கிச்சன்லயாச்சும் போய் பாருங்க...அடுப்பு பத்த வச்சாங்களான்னு

Fooled by Randomness

Image
As I am writing these lines I see the following headlines on my Bloomberg - Dow is up 1.03 on lower interest rates -Dollar down 0.12 yen on the higher Japanese surplus and so on for an entire page. If I translate it well, the journalist claims to provide an explanation for something that amounts to perfect noise. A move of 1.03 with the Dow at the 11,000 constitutes less than 0.01% move. Such a move does not warrant an explanation. There is nothing that an honest person can try to explain ; there are no reasons to adduce. But like apprentice professors of comparative literature, journalists paid to provide explanations, will gladly and readily provide them. - Fooled by Randomness , Nassim Nicholas Taleb. It is hard to rid oneself of the notion that one is somehow a unique snowflake. I - belong to large swarm of the population that rejects self- help books or even popular literature. They are meant for others. And don't worry - this post is not about how I was wrong all along and I

Poets Cornered

விதியினை நகுவன அயில்வழி- பிடியின் கதியினை நகுவன தளர்நடை-கமலப் பொதியினை நகுவன புணர்முலை- கலைவாள் மதியினை நகுவன வனிதையர் வதனம் - பால காண்டம், கம்பராமாயணம் "X is mocked at by Y (which is greater)" is the framework of this verse. I maintain a largely hostile attitude towards verse libre- particularly in Tamil. There has been a historical overemphasis on capturing the moment and expressing, to the extent of viewing form and conscious sculpting as antithetical to art itself.I find it hard to see spontaneity as its own argument.The pretense of spontaneity is sometimes at the core of a poem. There has been a lot of lip-service paid to the expression: 'knowing the grammar before breaking it', that I am bordering cynical on that. But there are some pretenses of spontaneity that do pull me back, make me enjoy and even believe (or atleast want to believe) the importance of 'the moment', the afflatus overpowering rules. (a la ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா/ சாத

Thoughts sparked by: "Husbands and Wives"

I dismiss Bhagat Singh without much deep consideration. I don't think Sex,Lies and Videotape should be considered a classic. Woody Allen's "Husbands and Wives" is one awesome film. In this post I shall proceed to connect these three seemingly disparate statements. To do that first the reader must know where I am coming from: I worry I will go through life and learn little from it. I wanted to say 'everyone worries that they will go through life and learn little from it'. But why hide behind numbers ? Why pretend my concern is universal when it is not. Yes this is my dominant, principal concern in a world shaken by famine, genocide, financial turmoil and the prospect of arthritis. The world does not concern me as much as my limited understanding of it does. Worse still is the realization that there are wrought-iron bounds to my understanding - not much different from a physical disability. This realization has been afforded to me by the heralded teacher that is

Experiencing Meaning

When I was 12 my favorite book was the dictionary. My ambition was one day to have spoken all the words in it. Naturally I would not have the occasion to do so. I also lack the inclination to do so for many of the words (particularly those which are sl. derog. taboo ) Knowledge of synonyms taught me that no word is indispensible. And that the fancy of a new word would never draw to me enough to change my vocabulary (if at all it were to come to that). Meaning was washed off expressions. What remained was 'going through the motions' of saying them. Reader : I surmise sir, that you are now devoted to pursuing the reclamation of meaning. Poet : Nah...I am only pursuing a humourous nugget so I can frivolize this post Reader : Frivolize ? Poet : I just wanted to use that word

தனியன்களுக்கான தனியன்

வேலப்பர் தின* சிறப்புக் கவிதை பிடிபிழைத்த வேல் எறிந்தலுத்தோய் அம்பெய்திடாதே கானமுயல் நோக்கி குடிகெடுக்கும் சமரசம் கசண்டு - வாழ்வில் வாய்த்திடாத கனாக்களே ஊக்கி * பெயர் உபயம்: சூனாபானா

சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு

Image
Author's note: One of the purposes of having a blog is to ensure this writers' works are not lost and is passed on safely to posteriority. The following piece was written sometime earlier in the context of RamSene's mild expression of displeasure against pubbing. As it is that time of the year again for cultural preservatives to get active - the writer assures himself of relevance. சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு கடந்த ஞாயிறு மதியம் மூன்று மணி அளவில், மும்பை விலெபார்லெ மெக்டொனால்ட் சிற்றுண்டி வளாகத்தில் கைத்தடிகளுடன் கூடிய ஒரு பத்திருபது நபர் குழு தடியடி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பெண்கள் உள்பட அங்கிருந்த பல வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் காயப்பட்டனார். சாதாரணமாக குண்டுவெடிப்புகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மும்பை நகரவாசிகள் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இது நிகழ்ந்தேரியது. லக்ஷ்மண் சேனா இச்சம்பவத்துக்கு முழுப்பொறுப்பேற்றுள்ளது லக்ஷ்மண் சேனா என்ற அமைப்பு."ராமபிரானைக் காப்பதற்கே அனந்தனின் அவதாரமாகத் தோன்றிய லக்ஷ்மணர் தோன்றினார். அதுப

Mike Testing

அந்நியன் வந்தான் அம்மணமாக

Image
இதைப் படிக்காவிட்டால் பேரிழப்பு என்பனவற்றைத் தவிற பிறவற்றைப் படிக்க நான் முனைவதில்லை என்றார் எமர்ஸன். வியர்வை சிந்தி படித்துவிட்டு 'நேரம் வீண்' என்ற புரிதலை எட்டுவது மிகவும் எரிச்சலானது. வந்து குவியும் எழுத்து அத்தனையும் படிக்கமுடியாததால் தெரிவு செய்யவேண்டியதாகிறது. ஆதர்ச எழுத்தாளர்களே சிலசமயம் நம் காலைவாரிவிடும்போது புதியவர்களை எங்கு நம்புவது ? நாம் மதிக்கும் விமர்சகர்களின் மதிப்புரைகள் உதவும் என்பது ஓரளவில் தான். முரண் இல்லாமல் இயங்க வேண்டிய கட்டாயத்தின் பளுவில் அவர்கள் இயங்குவதால், அவர்கள் விருப்பங்கள் நாளடைவில் இலக்கியக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு கொழகொழத்து விடுகின்றன என்பது என் செல்லத் தேற்றங்களில் ஒன்று. விருப்பு முதலில் நிகழ்கிறது. அதற்கானக் காரணத்தேடல் பிறகு. காரணங்களைத் தேடிக் கண்டடைந்து மற்றவர்களுக்கு விளக்கிட முடியும் என்ற நம்பிக்கை, நம் விருப்புகள் அறிவுபூர்வமானவை என்ற எண்ணத்தால் தோன்றுகின்றது. நம் விருப்பங்கள் அறிவுவயமாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு விருப்பம் மட்டுமே. "எனக்குப் பிடித்தது, உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படி" என்ற நண்பர்களின் பரிந்து