Posts

கற்பில் இரவுக்குறி இடையீடு

பீடிகை  : தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்  அம்மா அரிவை முயக்கு எனக்கு மிகப்பிடித்த குறள்களில் ஒன்று நமது மெய்யியல் புலத்தில் வழங்கிவரும் த்ரிவர்க்க பகுப்புகளான: தர்மம்-அர்த்தம்-காமம் (முறையே அறம், பொருள், இன்பம்)  ஆகியவை ஒன்றுதிரண்டு வரும் குறள் இது. இப்போது இக்குறளைக் குடலாபரேஷன் செய்வோம்: பருண்மையான பொருட்களை உவமையாக்கி கருத்துகளைப் புலப்படுத்தும் உத்தியை நாம் கவிதைகளில் காணலாம் (அகழ்வாரைத் தாங்கும் நிலம் - பொறுமை, தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - அறிவு). ஆனால் இங்கு தலைவன் இங்கு விவரிப்பது தலைவியை அணைப்பதை.  அழகிய மாமை நிறத்தாளை, அரிவை பருவத்தாளை அணைத்தல் (பருண்மை) எத்தகையது? ஒருவன் தனக்கு சொந்தமான இல்லத்தில், தனக்கு உரிய உணவை உண்ணும் இன்பத்தைப் போன்றதாம்.  பொருட்செல்வத்தை, அறத்தின் வழி நின்று நுகர்வதைப் போல இவளை அணைத்தல், என்ற வருணனையின் நுட்பத்தை என்னவென்பது. Propriety, moderation என்ற வழக்கொழி நிலையெய்திய கல்யாண குணங்களைத் தன்னுள் குறுகத் தரித்த குறள். சரி இதுக்கென்னப்பா இப்போ? சொந்த ஸாஹித்யத்து க்குப் பீடிகை ஸ்வாமி தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்...

The Legend of Butler Kandappar

Image
Foreword I had intended to post this on Vaikāsi Anusham.  But today is Ayōthidāsar’s birthday and I saw  a tweet by the TN BJP  chief claiming  "திருக்குறளை இன்றைய அச்சு வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கு அரும்பணியாற்றியவர்".   This, in in of itself is a curious claim. Ayōthidāsar did write a commentary to it from his point of view. But that hardly qualifies as the definitive form we see today ( " இன்றைய அச்சு வடிவம்") I infer what Annamalai is referring to is  Ayōthidāsar’s claim to be the descendant of the heroic Butler Kandappan whose intervention ensured we have the text today. Story The story of ‘Butler Kandappan saving the TirukkuRaL manuscripts seems to have come from Ayōthidāsar himself,  like many others! 
I have not read Ayōthidāsar’s own’s words on the claim but many, including reliable scholars like Stalin Rajangam and Prof.Dharmaraj have made the claims that Butler Kandappar was the one who gave the kuRaL manuscript to F.W.Ellis (via Lor...

40

Image
நாற்பதில் கனிவு மறுநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மேலதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டார் ராமாராவ். “ ஹேப்பி ரிடர்ன்ஸ்! உங்களுக்கு நாற்பது ஆகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை ” பேருந்துநிறுத்தத்தை நோக்கி சாலையில் நடந்த ராமாராவ், சற்று நின்றார்; முடிதிருத்தகம் ஒன்றின் வாசலை அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டு, “ பார்த்தால் நாற்பது போல் இல்லைதான் ” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு நடந்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது, மறுநாள் பிறந்தநாள் என்று அவருக்கு நினைவில்லை. ஒரு அலுவல் குறிப்பை எழுதும்பொழுது தான் மறுநாள் ஏப்ரல் 14ம் தேதி என்பதை உணர்ந்தார்.  பொதுவாக பிறந்தநாட்களுக்கு வீட்டில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இது ஒரு சிறப்பான நிகழ்வு. நாற்பதைக் கடப்பது முக்கியமான மைல்கல், விடுப்பெடுத்து கொண்டாடத் தகுதியானது தான். பாரிமுனையில் தள்ளுமுள்ளைச் சமாளித்து பேருந்தில் ஏறி, கைப்பிடியைப் பற்றித் தொங்கிக்கொண்டார். “ நல்லவேளை, ஒருகாலத்தில் குரங்குகளாய் இருந்தோம் ” என்று எண்ணிக்கொண்டார். “ இல்லையெனில்  அசல் குரங்குச்செயல்களான இடிப்பதும், தொங்குவதும் எ...

தமிழிலக்கியமும் தைப்பொங்கலும்

Image
 தைப்பொங்கல் ஒரு உழவர் பண்டிகை என்பது இன்று காணும் நிதர்சனம் என்றாலும், அது எக்காலத்தில் இந்நிலையை அடைந்தது என்பதில் தெளிவில்லை. ‘சங்க காலம் முதற்கொண்டே இயற்கைக்கும், மாடுகளுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவைக் கொண்டாடி வருவது தெளிவு’ என்கிற ரீதியில் ஒரு பொதுப்புரிதல் நிலவுகிறது. ஆனால் அதற்கு எந்த இலக்கிய சான்றும் இல்லை. பொதுவாக சங்ககாலம் தொட்டு தைப்பொங்கல் தமிழர் பண்டாட்டில் நிலவுவதாக நம்ப விழைபவர்கள் காட்டும் சில மேற்கோள்களைப் பார்ப்போம் (பலர் இவ்வரிகளை புளகாங்கித வாட்ஸாப் இடுகைகளில் பார்த்திருக்கலாம்!) 1. அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த  ஆய் கரும்பின் கொடிக்கூரை  சாறு கொண்ட களம் போல வேறு வேறு பொலிவு தோன்ற (புறநானூறு 22) சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் போர்ப்பாசறையைப் பாடும் பாடலில் வரும் வரி இது.  இவ்வரியின் பொருள்: உ உ “அசைந்த செந்நெல் கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பால் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை, விழா எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் போல வேறு வேறாக பொலிவு தோன்ற.... ” (உ.வே.சா உரை) இப்பாடலின் நிகழ்காலம் பொங்கல் விழா அல்ல, போர்க்களம். செந்நெல், கரும்பு இரண்...

அறத்தை ஆக்குவது

தொல்காப்பியம் வேற்றுமையிலில் 2ம் வேற்றுமை உருபான ஐ உருபு பொருட்படும் இடங்களை சேனாவரையர் விளக்குகிறார் காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஒப்பின் புகழின் பழியின் என்றா பெறலின் இழவின் காதலின் வெகுளியின் செறலின் உவத்தலின் கற்பின் என்றா அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின் நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா ஆக்கலின்  சார்தலின் செலவின் கன்றலின் நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின்   ....  மேற்குறிப்பிட்ட    சொல்லதிகாரம் 72வது நூற்பாவில்  காப்பு (காத்தல்), ஒப்பு (ஒத்தல்)... என 28 இடங்களின் ஐ உருபு பொருள்படுவதைக் கூறுகிறார் இவை மூன்று வகையான பொருள்கள் 1.      இயற்றப்படுவது (i.e. உண்டாக்கப்படுவன)  a.      இழைத்தல் -> எயிலை இழைத்தான் (எயில் என்றால் சுவர்) 2.      வேறுபடுக்கப்படுவன ( i.e.  தன் இயல்பில் இருந்து திரிந்தன) a.      அறுத்தல்  à  நாணை அறுக்கும் (ஏற்கனவே இருந்த கயிறு எனும் பொருளை அறுத்து அதன் இயல்பை மாற்றுவது) 3.      எய்தப்படுவன (பொர...

ஒரு தேரில் இரு கிருஷ்ணன்கள்

Image
உத்யோக பர்வத்தில் ஒரு இடம். பார்த்தனுக்கு சாரதியாக இருக்க கிருஷ்ணன் சம்மதித்துவிட்டான் என்ற செய்தி அறிந்த த்ரிதராஷ்ட்ரர் புலம்புகிறார்: ஒரு ரதத்தில் இரு கிருஷ்ணன்களும் (அர்ஜுனனும் கரிய நிறத்தவன் என்பதால் அவனுக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் உண்டு), காண்டீபமும் சேர்ந்துவந்தால் நிகழப்போகும் தாக்குதலை யாராலும் தாங்கமுடியாது என்பது எனக்குக் கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இதைக் க்கௌரவர்கள் உணரவில்லையே , என்று அங்கலாய்க்கிறார். காங்குலியின் மொழிபெயர்ப்பில் : We hear that the two Krishnas on the same car and the stringed Gandiva,--these three forces,--have been united together. As regards ourselves, we have not a bow of that kind, or a warrior like Arjuna, or a charioteer like Krishna. The foolish followers of Duryodhana are not aware of this. O Sanjaya, the blazing thunderbolt falling on the head leaveth something undestroyed, but the arrows, O child, shot by Kiritin leave nothing undestroyed. Even now I behold Dhanajaya shooting his arrows and committing a havoc around, picking off heads from bodie...

யாரென்று தெரிகிறதா

Image
  வ்யாஸபாரதத்தில் சிறப்பாக சில இடங்களில் ‘க்கூட ஶ்லோகங்கள் ’  வரும். அதாவது நேராக படித்தால் பொருளற்ற சொற்றொடர் போலவும் ,  பிரித்துப் படித்தால் பொருளுணரும்படியாகவும் அமைக்கப்பெற்ற ஶ்லோகங்கள்.   இவை பிரிமொழி ஶ்லேஷத்திலிருந்து (சிலேடை) வேறுபட்டவை. சிலேடையில் இருவேறு பொருள்கள் வரும். ஆனால் (நான் புரிந்துகொண்டவரை) க்கூட ஶ்லோகத்தில் மறைபொருள் புரியாவிடில் மிஞ்சுவது பொருளற்ற சொற்றொடரே.    இவ்வாறு அமைத்ததற்கு ஒரு அழகான புராண விளக்கம் உண்டு.  வ்யாஸர் சொல்லச்சொல்ல எழுத்திலாக்குவதற்கு ஒப்பிய விநாயகர் வைத்த ஒரே நிபந்தனை: புரியவில்லையென்றாலொழிய எழுத்து வேகம் குறையாது ,  ஆனால் தான் எழுதும்வேகத்துக்கு வ்யாஸர் சொல்லவேண்டும் என்பதே, அது. ( Painting by Sri Keshav ) அதனால் வ்யாஸர், தனக்கு சிந்தித்துத் தொகுத்துக்கொள்ள நேரம்வேண்டி ,  விநாயகவேகத்தை மட்டுப்படுத்த எழுதியவை இந்த கூட ஶ்லோகங்கள் என்பர். அவ்வகை ஶ்லோகங்களில் ஒரு ப்ரபலமானது: நதீ ³ ஜ லங்கேஶவனாரிகேதுர்னகா ³ ஹ்வயோ நாம நகா ³ ரிஸூனு: இது சிறப்புறுவது, கதையில் இது தோன்றும் கணத்தால்: விராட பர்வத்தில் வெட்சிப் ப...