தெள்ளிய சிங்க தேவு
இன்று நரஸிம்ஹ ஜெயந்தி. இவ்வவதாரத்தின் வசீகரத்தை விளங்கிக்கொள்வதே கடினமாக இருக்கிறது. 'வசீகரம்' என்றால் காட்சி அழகைச் சொல்லவில்லை. அதை ரசிக்கும் வழிவகை அறியேன். கருத்தும், குறிப்புணர்த்துபவையும், அவை எழுப்பும் எண்ணங்களுமே அலாதியானவை. Dasavatara Cave, Ellora. Shot in 2015. விளங்கவொண்ணா முரண்களின் தொகையாக: ஹிரண்யனுக்கு கொடியவனாக, ப்ரஹலாதனுக்கு காருண்யனாக வந்தவன் - என்று பரிபாடல் முதற்கொண்டு பாடப்பட்டது நரஸிம்ஹ அவதாரம். ஆனால் அது ஒன்றும் இவ்வவதாரத்துக்கு மட்டுமான ப்ரத்யேக குணாதிசியம் இல்லையே. சாதுர்ய சாபங்களை முறியடிக்கும் சாகசக் கதைகள் உலகத்தில் பற்பல உண்டு. அதிலும் தனித்துவமானது இவ்வவதாரக்கதை என்று சொல்லுவதற்கில்லை. ஆள்-அரி'யாக வந்தமை, பரிணாமக் கோட்டின் ஒரு விநோதப்புள்ளி. அது தோற்றுவிக்கும் எண்ணம்தான் என்ன? Mythologies கவிதையில் ஏ.கே.ராமானுஜன் அவருக்கே உரிய பாணியில் எழுதிய வரி ஒரு திறவுகோல்: A.K.Ramanujan (wiki) assassin of certitudes, slay now my...