Posts

Showing posts with the label KuRaL

கவரிமாவும் மானமிலா பன்றியும்

Image
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே Varaha  @ Badami இது ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் ஒரு பிரபலமான பாசுரம். பொருள் : வராஹ அவதாரத்தில் பூதேவியை காப்பாற்ற, அழுக்கான நீர்வ்வழியும் மானம் இல்லாத பன்றி உருவை எடுத்து -  திருவரங்கன், என்னிடம் முன்பு பேசிய நினைவுகளை பெயர்த்து எடுக்க முயன்றாலும் அவை பெயரா இதில் படித்ததும் துணுக்குறச் செய்யும் சொற்ற்றொடர்: மானமிலா பன்றி . என்னதான் பக்தி என்றாலும் இப்படி ஒரு அடைமொழி பயன்பாட்டை எப்படி ஏற்பது?  கோதை நாச்சியாருக்கே உரிய தனித்துவத் தீவிரத்தைக் கருத்தில் கொண்டாலும் சற்றே அதீதமாகத் தோன்றும். 1936ல் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில்  மானமிலா  என்பதை  ஹேயமானதொரு உருவுகொண்ட   என்று உரைக்கிறார். ஆண்டாள் தனது ப்ரபன்னரோஷத்தின் மிகுதியால்  'மானமிலாப் பன்றி' என்று செய்தேயும்...   என்று அழுத்தம் திருத்தமாக விளக்குகிறார். அதாவது, ஆண்டாள், சரணாகதி உணர்வின் மிகுதியில் அப்படி...

நம்மாளு

Image
  இன்று வைகாசி அனுஷம். அதனால் ஒரு திருவள்ளுவர் இடுகை என் வருடாந்திர வழமை. இம்முறை ஒரு Recycle. ஒரு இணையநண்பரின் blogல் இட்ட commment. அதன் ஞானப்ரகாசம் குடத்திலிட்ட விளக்காய் இராமல், வருங்காலச் சந்ததிகளைச் சென்றடையும் பொருட்டு இங்கு இட்டு சாஸ்வதப்படுத்துகிறேன். /“அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று”  / போன்ற வரியை வைத்து வள்ளுவரை யாக-மறுப்பாளர் என்று நிறுவ சமணத்தரப்பு முயன்றமையை வை.மு.கோ குறிப்பிடுகிறார்(ராம்).   Quite amusing. ஒன்றை விடச் சிறந்தது மற்றொன்று என்று சொன்னால் என்ன பொருள்? உயர்ந்தது என்று கொள்ளத்தக்க ஒன்றைக் காட்டிலும் இது உயர்ந்தது என்று தானே பொருள்படும்? வள்ளுவர் சொன்னது எப்படி 'யாக மறுப்பு' என்று பொருள்படும்?  உதாரணமாக பாரதியின் வரிகளைப் பார்ப்போம்: அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்,  பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,  அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எழுத்தறிவித்தல் ௸ உயர்ந்த தர்மங்களை விட மிக உயர்ந்தது என்றல்லவா பொருள்படும்? இதிலிருந்து ‘பாரதி பிற ...

மடி

இன்று வைகாசி அனுஷம்.  திருக்குறளில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து, கண்ணில் படும் குறளைப் படித்து, அது ஏற்கனவே அறிந்ததாக இருப்பின் மூடி, வேறொரு பக்கம் திறந்து தேடிப் படித்தேன். படிக்காத புதுக்குறள் கிடைக்கும் வரை. ஓரிரு வருடங்களாக இது ஒரு புதுப்பழக்கம். இதை ஒரு அறிவுசார்(!) வழிபாட்டுச்சடங்காக ஆக்கிவிட உத்தேசம்.  இன்று கிடைத்தது: மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் அதிகாரம்: மடியின்மை குறள் எண்: 602 மடி என்றால் சோம்பல். தான் பிறந்த குடியை உயர்ந்த குடியாக ஆக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் சோம்பலை ஒழிப்பர் என்பது இன்றைய பொதுப்புரிதலில் நிலைத்துவிட்ட பொருள். மடியை மடியா - என்பது எவ்வாறு 'சோம்பலை ஒழிப்பது' என்று பொருள்படும்? எல்லாரும் 'மடியா' என்பதை வினையெச்சமாகப் பொருள்கொண்டு அப்படி உரை எழுதியிருக்கிறார்கள். சரி தான். ஆனால், 'இடும்பைக்கு இடும்பை' போன்று அத்தனை அழகாக இல்லை என்று தோன்றியது. பரிமேலழகர் உரை: நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங...

இருவேறு

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதல் வேறு is one of the several kuṟaḷs where vaḷḷuvar is employs snark to great effect. There is an almost audible sigh that of the 'learned' assuaging themselves as tirumakaḷ bypasses them. I have read the following   kuṟaḷ  as a sort of companion to the above.

அன்று நான் பிறந்திலேன்

ஓசையில் வெண்புறா கூட்டம் வழிவிட/  பூசையை வீசியே தேடு கடந்த செவ்வாய்க்கிழமை (29/05) வைகாசி அனுஷம் . திருவள்ளுவர் திருநக் ‌ ஷத்திரம் . நமக்கு நமது கவிஞர்க ளின் வரலாறு தெரியாது. கர்ணபரம்பரை கதைகள் , தொன்மங்கள் மட்டுமே உண்டு.   ஆழ்வார் , நாயன்மார்களுக்கு நக் ‌ ஷத்திரம் கொண்டாடப்படுவது எவ்வாறு ஒரு தொடர்ச்சி அடிப்படையிலோ , அந்த அளவே ஒரு உண்மைத்தன்மை / இன்மை நோக்கோடு இதை அணுகலாம் .

கொம்போ றெக்கையோ

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று

சால்பு

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (987) this is we have read. Its more famous cousin KuRaL 'merely' encourages to rise above reciprocity. In fact, that kuRaL prescribes 'shame the other with kindness' as a punishment. But, சால்பு is made of sterner stuff than that. This kuRaL makes good behaviour absolutely incumbent upon one who aspires for சால்பு.

எமக்குத் தொழில்

காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ? மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்தொழிலைக் கருதுவாரோ? - பாரதி அறுபத்தியாறு (53) வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. - குறள் (1268)