ரோஜா ராஜா
Why couldn't a girl be queenly, and give the gift of herself - DH Lawrence (Lady Chatterley's Lover) ராணியை ராணியாகவே வைத்துக்கொண்டு ரசிக்க, ராஜா வேண்டுமே. என் இசை ரசனை கொஞ்சம் மட்டு என்று பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன். இதைக் கேட்டுக் கேட்டு எரிச்சலடைந்த நண்பர்கள் தவிற, புதுஅறிமுகமாக கிடைக்கும் (சிக்கும்?) meesicalகள் 'இசையை ரசிக்க இரு காதுகள் இருப்பதே போதுமான தகுதி' என்பது போன்ற தாட்சண்யமான வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.'படிப்பதற்கு இரு கண்கள் போதும்' என்று யாரையாவது நான் மனமாற சொல்லமுடிந்தால்தான் பிரபஞ்சம் சமநிலை எய்தும்.