Posts

மடி

இன்று வைகாசி அனுஷம்.  திருக்குறளில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து, கண்ணில் படும் குறளைப் படித்து, அது ஏற்கனவே அறிந்ததாக இருப்பின் மூடி, வேறொரு பக்கம் திறந்து தேடிப் படித்தேன். படிக்காத புதுக்குறள் கிடைக்கும் வரை. ஓரிரு வருடங்களாக இது ஒரு புதுப்பழக்கம். இதை ஒரு அறிவுசார்(!) வழிபாட்டுச்சடங்காக ஆக்கிவிட உத்தேசம்.  இன்று கிடைத்தது: மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் அதிகாரம்: மடியின்மை குறள் எண்: 602 மடி என்றால் சோம்பல். தான் பிறந்த குடியை உயர்ந்த குடியாக ஆக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் சோம்பலை ஒழிப்பர் என்பது இன்றைய பொதுப்புரிதலில் நிலைத்துவிட்ட பொருள். மடியை மடியா - என்பது எவ்வாறு 'சோம்பலை ஒழிப்பது' என்று பொருள்படும்? எல்லாரும் 'மடியா' என்பதை வினையெச்சமாகப் பொருள்கொண்டு அப்படி உரை எழுதியிருக்கிறார்கள். சரி தான். ஆனால், 'இடும்பைக்கு இடும்பை' போன்று அத்தனை அழகாக இல்லை என்று தோன்றியது. பரிமேலழகர் உரை: நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங...

மிகவோர் காலம் இனியில்லை

மத்தேயு 8 21 யேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம்,, “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். 22 ஆனால் இயேசு அவனிடம்,, “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும் ” என்றார். திருவாசகம் - யாத்திரைப்பத்து நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. ⁠

மத்தம்

நற்றிணை 12 பாடியவர்: கயமனார் துறை: பாலை Vaidehi Herbert’s translation விளம்பழம் கமழும் கம்ஞ்சூல் குழிசிப்     பாசம் தின்ற தேய் கால் மத்தம்              நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்  வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்   அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்   'இவை காண்தொறும் நோவர் மாதோ ; அளியரோ அளியர்  என் ஆயத்தோர்!' என  நும்மொடு வரவு தான் அயரவும்,  தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே Wood apple fragrances in pots that are filled with curds, their noisy churning rods tied to posts and reduced by circling ropes, are the first sounds of dawn when darkness leaves. She hides her body well and removes from her feet beautiful jingling anklets, and along with her ball, so splendidly decorated with lines, places them aside. “Whenever they see these, they’ll be sad,” she thinks about her pitiful friends and tears come to her eyes beyond control, e...

ஏனை எழுத்தென்ப

முனைவர். வினோத் ராஜன் ( அவலோகிதம் புகழ் ), யுனிகோட் ஸங்கத்தார்க்கு ஸமர்ப்பித்த விஞ்ஞாபம் கண்டோம் . இதற்கு விரோதபிப்ராயங்கள் எழுந்துள்ளனவாம். தெலுங்கு பாஷையின் ப்ரயோக லிபியில், தமிழின் ப்ரத்யேக அக்‌ஷரங்கள் இரண்டினை ஸங்கமஞ் செய்வதால், தெலுங்கின் ஆதார ஶ்ருதியே க்‌ஷீணித்துப் போகும் என்றும்; நாளை பிற பாஷைகளுக்கும் இந்த ஸ்திதி ஏற்பட்டுவிடும் என்ற அதீத ஜாக்ரதை உணர்வும் மேலிட்டிருப்பதை அறிந்தோம்.  இதுகாறும் தேவநாகரி லிபி அறியாத, எம்மைப் போன்ற தமிழர், ஸமஸ்கிருத ஶ்லோகங்களை, ஸமஸ்கிருதம் என்று நன்கறிந்து  (அது தமிழென்று சற்றும் மயங்காது) ஓரளவாவது மூல ஒலி துல்லியத்துடன் வாசிக்க இயைவது கிரந்தானுஷ்டாத்தாலே அன்றோ? என்ன ஒன்று, நம்மூரில் கிரந்தம் புழங்கியதற்கு நீண்ட நெடும் சரித்திரம் உண்டு. அதனால் ' கிரந்த அக்‌ஷரங்கள் தமிழ்தட்டச்சுப் பலகையில் இருக்கலாமா கூடாதா? ' என்பதெல்லாம் ஒரு கேள்வியே அல்ல.  சரித்திரத்தில் இருந்திருக்கிறது, அதனால் தட்டச்சு பலகையில் இருந்தாகவேண்டும். அவ்வளவு தான். 

ஆண்

முயக்கம் தொடக்கா நாணணி மடவையின் தயக்கம் தளர்த்திடும் பணிமொழி பகன்று முயக்கம் தொடுத்திட வளியிடை விடாஅள் பயக்கும் மகிழ்வின் இடையும் மயக்கின் மீள்தலை முன்னுணர்ந் தனனே (ஒழுகிசை நேரிசை ஆசிரியப்பா)

37

Even with insects Some can sing - Some can't - Koboyashi Issa 36 , 34 ,  32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

சுமப்பது வம்பு

ஐயா நான் வெறும் வம்பன், இலக்கிய போக்கறியா புளிமக்கு - எப்படி வேண்டுமோ வைத்துக்கொள்ளுங்கள். But I can't for the life of my understand the basis of this rapprochement. Words have meanings don't they? Especially when they come from litterateurs? சாரு நிவேதிதாவிடம் எனக்கு பிடித்தமான ஓர் அம்சம், நான் அவருடன் அணுக்கமாக உணரும் ஓர் இடம், இலக்கியத்தை அவர் மிகத்தீவிரமாகவே எப்போதும் எடுத்துக்கொள்கிறார் என்பது. அதில் மழுப்பல்கள் ஒப்பேற்றல்கள் இல்லை. எப்போதும் அதற்கு முழுமையாகவே தன்னை அளித்துவிடுகிறார். இக்கதைகளை தேர்வு செய்வதற்கு இயல்பாக ஒரு வாசிப்பும் சுருக்கமான பட்டியலும்போதும். ஆனால் அத்தனை கதைகளையும் வாசித்து, தன் அளவுகோலை விளக்கி, கதைகளை விவாதித்து முடிவை முன்வைக்கிறார். எப்போதும் இலக்கியத்தில் செல்லுபடியாகக்கூடிய நாணயம் என்பது இதுவே – முழுதளிப்பு.   https://m.jeyamohan.in/130566#.Xo9u6yXhWEd Now if you rewind about a decade back: எழுத்தாளர்களை அவர்களை வாசிப்பதன் மூலமே மதிப்பிட முடியும். விவாதித்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு நூலையும் அட்டைக்கு அப்பால் வாசிக்காத , வாச...