(ஹிந்து மதஞானிகள்) யாரும் ‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று பிரசாரம் செய்யவில்லை. ‘மனிதர்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் சமமானவர்கள்’ என்றே பிரசாரம் செய்தனர். இது யாரையும் தொந்தரவு செய்யாத கருத்து என்பதால், இதை நம்புவதில்லோ, பிரசாரம் செய்வதிலோ யாருக்கும் யாதொரு தயக்கமும் இருக்க வாய்ப்பில்லை. ..... ஹிந்து சமுதாயம் ஒரு தார்மீக புத்துருவாக்கத்தை வேண்டி நிற்கிறது; அதைத் தள்ளிப் போடுவது ஆபத்து. இந்த புத்துருவாக்கத்தை தீர்மானிக்கவும், வழிநடத்தவும் வல்லவர்கள் யார் ? தம்மளவில் அறிவுசார் புத்துருவாக்கம் பெற்றவர்களும் , அறிவுசார் விடுதலையின் வழியாக நம்பிக்கைகளைக் கட்டமைத்துக்கொள்ளும் நேர்மையும், உறுதியும் கொண்டவர்களும் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், நமக்குக் காணக்கிடைக்கும் ஹிந்து சமுதாயத் தலைவர்கள் எவரும் இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் அல்லர். முதல்கட்ட அறிவுசார் புத்துருவாக்கம் அடைந்தவர்கள் என்று கூட அவர்களைப் பற்றிச் சொல்ல இயலாது. அப்படி ஒரு புத்துருவாக்கத்தை அவர்கள் அடைந்திருந்தார்கள் என்றால், பாமரப் பெருங்கூட்டத்தைப் போ...