Posts

Showing posts from 2017

எண்ணிலாத முன்னெலாம்

முன்பு இருந்ததோர் காரணத்தாலே மூடரே, பொய்யை மெய் எனலாமோ? முன்பு எனச்சொலும் காலம் அதற்கு மூடரே, ஓர் வரையறை உண்டோ? முன்பு எனச்சொலின் நேற்றும்  முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே; முன்பிருந்தது எண்ணிலாது புவிமேல் மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ?

Thoughts Sparked by Cafe Society

Image
There is no means of testing which decision is better, because there is no basis for comparison. We live everything as it comes, without warning, like an actor going on cold. And what can life be worth if the first rehearsal for life is life itself? - Milan Kundera (The Unbearable Lightness of Being) "Alternatives only exclude" says Bobby Dorfman (Jesse Eisenberg) to Vonnie -short for Veronica (Kristen Stewart) who ended up choosing his uncle (Steve Carrell) over him. He says that in CentralPark after spending a night taking her around NewYork City. The NewYork he had urged her move with him to, abandoning the California where they met. The California, which she too had then mentioned she wasn't getting much out of. But apparently her disfascination wasn't as strong as is. And/or her considerations were different and she has managed to embrace her choices better. So, who is Bobby saying the lines to, if not to himself - aloud?

ஆரினிக்கடைவர்

காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்: முக்குற்றம கற்றித் தெருளருள் வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர் வித்துக்கொரு முத்திக் குருநபி       எனவோதி மத்திட்டுவ லித்துச் சிறுபுலி கர்ச்சித்துமு ழக்கிக் குளறிட மத்திட்டுடை பட்டுப்  புடைபெயர் தயிரேபோல் மக்கட்குறு  துக்கப் படலையொ துக்கித்திகழ் சொற்கத்    தையுமுரி மைக்கத்தொடு கற்பித் தருள்வது வொருநாளே

வண்டு பாயும் திட வேலவன் தென்மலை

பூங்குழல் மொய்க்கும். அது தெரியும். என்னதான் மிகைக்கூறல் அழகை படித்து ரசிக்க முடிந்தாலும், தலைவி தலையை வண்டு மொய்ப்பதை நினைக்க கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கும். அந்தத் திகிலை படம்பிடித்த கவித் தருணங்களும் இருக்கலாம்,  என்று எண்ணிக் கடந்ததுண்டு. இன்று தட்டுப்பட்டது: வண்டை தலைவி தலைவி பூங்குழல் மீது ஏவி விட்டால் பாயுமன்றோ? ஆ! ஈதென்ன விபரீத சண்டைக் காட்சி? ஏவுவது யார்? மற்றொரு தலைவி, யார் சொன்னால் காட்டு வண்டு கூட கேட்குமோ, அவள்

மாசு

பாசிதூர்ந்து கிடக்கும் பார்மகட்கு பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் நீர்வார மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே நாச்சியார் திருமொழி 11:8 Who can guess what all He spoke* To Dame Earth as he lifted Her From the mossy depths Whilst He was a Shameless Soggy Swine That Resplendent Lord of Srirangam * what all he spoke

செய்

Image
மகாபாரதம் சாந்திபர்வம்- 75ம் அத்யாயம் யுதிஷ்டிரன்:  ஆட்சி அதிகாரம் தரும் மகிழ்ச்சிசையை கணப்பொழுதும் விழையேன் அதிகாரத்தை அதன் பொருட்டுக்காகவே விழைபவனும் அல்லேன் நல்லாட்சி செலுத்துவதால் வரும் நற்பயனுக்காகத் தான் அதை நாடினேன். ஆனால் இவ்வழி  எய்துதற்கு யாதொரு நற்பயனும் இருப்பதாய் தெரியவில்லை. அதனால் ஆட்சிவிடுத்து வனம் ஏகி நற்பயன் எய்துவேன் செங்கோல் துறந்து, புலனடக்கி   திருவனம் புகுந்து, வேரும்  கனியும் உண்டு வாழும் துறவியாகி தருமநற்பயன் எய்துவேன்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.

கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல்  ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்  செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான்  எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார் தாவீது, கோலியாற்றை ஒரே கல்லில் வீழ்த்திய காட்சி - வீரமாமுனிவர், தேம்பாவணி

34

I have never been able to understand where people got the idea that democracy was in some way opposed to tradition. It is obvious that tradition is only democracy extended through time...It is the democracy of the dead. Tradition refuses to submit to the small and arrogant oligarchy of those who merely happen to be walking about. All democrats object to men being disqualified by the accident of birth; tradition objects to their being disqualified by the accident of death. .... Poetry is sane because it floats easily in an infinite sea; reason seeks to cross the infinite sea, and so make it finite. The result is mental exhaustion... To accept everything is an exercise, to understand everything a strain. The poet only desires exaltation and expansion, a world to stretch himself in. The poet only asks to get his head into the heavens. It is the logician who seeks to get the heavens into his head. And it is his head that splits. - GK Chesterton, Orthodoxy  ஜனநாயகம் பாரம்பரியத்துக

இரு நிலாக்கவிதைகள்

பசி-கிள்ளி அழுகிற பசுங்கிளி குழந்தையின் அழுகையை அமர்த்து அமர்த்த - டம்ளரில் மணியடி, தாலாட்டு பாடு, தோத்தோ கூப்பிடு, பூனைக்கு பூச்சாண்டிக்கு பின்னணி குரல் கொடு கழுதை  என்னமும் செய். எனக்கொன்றும் இல்லை ஆனால் ரேழிக்கு வந்து நிலாக் காட்டாதே. காட்டினால் எட்டு நாளைக்கு முன் தட்டில் பூத்த இட்டிலி ஞாபகம்  அதற்கு வரும். எல்லோரும் ஏறினால் அப்புறம் அழுகைப் பல்லக்கை யார் சுமப்பார்கள்? - கல்யாண்ஜி கவிதை: அழுகைப் பல்லக்கு தொகுப்பு: புலரி உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்     ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை     நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்    சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  - பாரதிதாசன் புரட்சிக்கவி

பழையன கழிதலும் புதியன புகுதலும்

(ஹிந்து மதஞானிகள்) யாரும் ‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று பிரசாரம் செய்யவில்லை. ‘மனிதர்கள் அனைவரும் கடவுளின் பார்வையில் சமமானவர்கள்’ என்றே பிரசாரம் செய்தனர். இது யாரையும் தொந்தரவு செய்யாத கருத்து என்பதால், இதை நம்புவதில்லோ, பிரசாரம் செய்வதிலோ யாருக்கும் யாதொரு தயக்கமும் இருக்க வாய்ப்பில்லை.  ..... ஹிந்து சமுதாயம் ஒரு தார்மீக புத்துருவாக்கத்தை வேண்டி நிற்கிறது; அதைத் தள்ளிப் போடுவது ஆபத்து. இந்த புத்துருவாக்கத்தை தீர்மானிக்கவும், வழிநடத்தவும் வல்லவர்கள் யார் ?  தம்மளவில் அறிவுசார் புத்துருவாக்கம் பெற்றவர்களும் , அறிவுசார் விடுதலையின் வழியாக நம்பிக்கைகளைக் கட்டமைத்துக்கொள்ளும் நேர்மையும், உறுதியும் கொண்டவர்களும் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள்.   இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், நமக்குக் காணக்கிடைக்கும் ஹிந்து சமுதாயத் தலைவர்கள்  எவரும் இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் அல்லர். முதல்கட்ட அறிவுசார் புத்துருவாக்கம் அடைந்தவர்கள் என்று கூட அவர்களைப் பற்றிச் சொல்ல இயலாது. அப்படி ஒரு புத்துருவாக்கத்தை அவர்கள் அடைந்திருந்தார்கள் என்றால், பாமரப் பெருங்கூட்டத்தைப் போல் தங்களைத் தாங்களே

ராமாவதாரம்

Image
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத் தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ் தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய். ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. (பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்) நாகேஸ்வரஸ்வாமி கோவில் -கும்பகோணம் (10ம் நூற்றாண்டு) அப்போது  அந்த  வேள்வித்  தீயிலிருந்து தீ எரிவது போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது புள்ளமங்கை போலவே,  அபாரமான சிறுசிற்பங்கள் நிறைந்த கோவில் இது. வேள்வித்தீயின் ஜ்வாலைகள், கலைக்கோட்டு முனிவரின் மான்முகம், கால்மடக்கி அமர்ந்திருக்கும் விதம், அவர் கீழுடையின் மடிப்புகள், நெய்விடும் கரண்டி (!),  எழும்பும் பூதத்திடமிருந்து அவிர்பாகத்தை வாங்க எத்தனிக்கும் தயரதனின் ஆவல், பூதத்திற்கு நேர்-மேலே - நடந்துகொண்டிருக்கும் அதிசயத்தை வியக்கும் முனிவர் (வசிஷ்டர்?).. இவை யாவும் எத்தனைச் சிறிய சட்டகத்தில் தெரியுமா? காண்க: இந்த ‘பூதம்’ நம் புரிதலில் உள்ள பூதகணம் போல வடிக்கப்பட்டிருக்கிறது. வால்மீகியில் அவ்வாறு இல்லை. வ

போதும்

இரு இரு...ஷூ போட்டு விடறேன் நானே போட்டுப்பேம்மா இரு... நானே நானே... நில்லு....! நானே... (அழுகை) Overconfidence வேண்டாம், Confidence போதும்

என்றும் பாடம்

ஐயம் புகினும் செய்வன செய் Even when in doubt Do what you gotta do

ஹோலி

Image
தன்முன் எதிர்படும் மங்கைக் கிலியுற   வண்ணம் பூசிடும் அயலானே கன்னற் சிலையவன் அங்கம் எரிபட  இந்நாள் நுதல்விழித் தரனாரே ( தாராசுரம் )

காதலும் விடுதலையும்

காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில் ; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர் ; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்து விட்டால் வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.

கம்பராமாயணம் கருடத் துதி - வேதமும் கீதையும்

உரையில் குறிப்பிடப்படும் பாடல்கள்:

கல்லில் உறைந்த கணம்

Image
கீழே உள்ளது புள்ளமங்கை பிரஹ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் எடுத்த படம். பராந்தகன் I காலத்துக் கோவில்(லாம்). Miniature சிற்பங்களுக்காக பிரசித்தம். ராமாயணக் கதை சங்ககாலம் தொட்டே தமிழ்நாட்டில் அறியப்பட்டதுதான் என்றாலும், ஏனோ ராமாயணச் சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் இல்லை. கைலாயமலையை உலுக்கும் ராவணன் சிற்பங்கள் கூட உண்டு: காஞ்சி கைலாசநாதர் கோவிலில் அலறும் ராவணன் (பெயர்க்காரணச்சிற்பம்?). ஆனால் ராமாயணக் காட்சிகள் இல்லை! புள்ளமங்கையில் காணக்கிடைப்பவையே முதல் ராமாயணச் சிற்பங்கள். அங்கே பார்த்த பற்பலவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்த பலவற்றில் ஒன்று இது.

கீசக வதம்

Image
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் வடமேற்கு மூலையில் காணக்கிடைத்த சிற்பம். மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட, சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட, தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ! - வில்லிப்புத்தூரார்

வசையில் புகழ் மகாநதி

 என் பத்தாவது பாடப்புத்தகத்துல ஒண்ணு பூவண்ணனோட ‘வளவன் பரிசு’ . அதுல பட்டினப்பாலை நிறைய வரும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் வம்சத்து ஆள் ஒருத்தர் செகண்ட் ஹீரோ. தன்னைப் பாடிய உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாலற்வளவன் தந்த பரிசான உயர்ந்த மண்டபத்தை, பாண்டியர்கள் தகர்க்காம காப்பாத்துறதைப் பத்தின சரித்திரசாகச நாடகம். சிம்லா ஸ்பெஷல் ஸ்ரீப்ரியா நாடகம் மாதிரி ஓங்கி உயர்ந்த பட்டினப்பாலை மண்டபம் எல்லாம் செட்-ல வரும். எல்லாரும் ஒவ்வொரு பாத்திரம் ஏற்று வகுப்புல படிப்போம் (நான் படைவீரன்-1) அதுக்கப்புறம் பட்டினப்பாலை படிக்கவே இல்லையேன்னு திடீர்னு குரங்குமனம் தாவி எடுத்து வாசிச்சா…ப்பா.

OrE the Democracy

You choose a member indeed; but when you have chosen him, he is not member of Bristol, but he is a member of  parliament .   ..   Your representative owes you, not his industry only, but his judgment; and he betrays, instead of serving you, if he sacrifices it to your opinion.  Edmund Burke, Speech to the Electors of Bristol

எமக்குத் தொழில்

காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ? மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்தொழிலைக் கருதுவாரோ? - பாரதி அறுபத்தியாறு (53) வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. - குறள் (1268)